பொது செய்தி

இந்தியா

தயாரிப்பு துறை உற்பத்தி மே மாதத்தில் பாதிப்பு

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : 'ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா' எனும் நிறுவனம் உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், மே மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன்படி, கடந்த மே மாதத்தில் தயாரிப்பு துறையின் உற்பத்தி சரிவை கண்டுள்ளது. பாதிப்புகொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தேவைகளில் பலத்த

புதுடில்லி : 'ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா' எனும் நிறுவனம் உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், மே மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.



latest tamil news



இதன்படி, கடந்த மே மாதத்தில் தயாரிப்பு துறையின் உற்பத்தி சரிவை கண்டுள்ளது. பாதிப்புகொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தேவைகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வளர்ச்சி போக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மே மாதத்துக்கான, 'பி.எம்.ஐ., குறியீடு' 50.8 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஏப்ரலில், 55.5 புள்ளிகளாக உயர்ந்திருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீட்சி காண துவங்கிய நிலையில், ஏப்ரலில் தயாரிப்பு துறை உற்பத்தி அதிகரித்திருந்தது.


latest tamil news


குறைந்த வளர்ச்சி : ஆனால், அடுத்து இரண்டாவது அலை ஏற்பட்ட பின், மே மாதத்தில் சரிவை கண்டுள்ளது. கடந்த, 10 மாதங்களில் மிகக் குறைந்த வளர்ச்சியை இம்மாதம் கண்டு உள்ளது. குறிப்பாக, மூலப்பொருட்கள் இருப்பு குறைவாக இருந்ததும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-ஜூன்-202109:39:13 IST Report Abuse
பாமரன் இது கவலையளிக்கும் விஷயம்....🤭🤭
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X