புதுடில்லி : 'ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா' எனும் நிறுவனம் உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், மே மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த மே மாதத்தில் தயாரிப்பு துறையின் உற்பத்தி சரிவை கண்டுள்ளது. பாதிப்புகொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தேவைகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வளர்ச்சி போக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மே மாதத்துக்கான, 'பி.எம்.ஐ., குறியீடு' 50.8 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஏப்ரலில், 55.5 புள்ளிகளாக உயர்ந்திருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீட்சி காண துவங்கிய நிலையில், ஏப்ரலில் தயாரிப்பு துறை உற்பத்தி அதிகரித்திருந்தது.

குறைந்த வளர்ச்சி : ஆனால், அடுத்து இரண்டாவது அலை ஏற்பட்ட பின், மே மாதத்தில் சரிவை கண்டுள்ளது. கடந்த, 10 மாதங்களில் மிகக் குறைந்த வளர்ச்சியை இம்மாதம் கண்டு உள்ளது. குறிப்பாக, மூலப்பொருட்கள் இருப்பு குறைவாக இருந்ததும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE