இது உங்கள் இடம் : தி.மு.க.,வை கலைத்து விடலாமா?

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (168) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி சி.பி.எஸ்.இ., பள்ளியை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியிருக்கிறார். அந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் ராஜகோபாலன் பாலியல்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி சி.பி.எஸ்.இ., பள்ளியை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியிருக்கிறார். அந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவியர் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு உள்ளார். மேற்கொண்டு விசாரணை நடந்து வரும் நிலையில், அமைச்சர் இப்படி கூறியிருக்கிறார்.latest tamil newsகுற்றச்சாட்டுக்கு ஆளானவர் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் வேறு யார் யாருக்கு தொடர்புள்ளது என்பதை கண்டறிந்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதற்காக, அந்த பள்ளியையே அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆலோசிப்பது, ஆளுங்கட்சியின் அடாவடித்தனத்தின் உச்சமாக தெரிகிறது. இதில் சிறிது கூட நேர்மையோ, நியாயமோ இல்லை. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது கூட பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன என்பதை மறந்து விட முடியாது. தற்போது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால், அரசு பள்ளிகள் அனைத்தையும் மூடிவிட முடியுமா? நடப்பதை பார்க்கும்போது, குற்றவாளியை தண்டிப்பதை விட, அப்பள்ளியை செயல்பட விடாமல் முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது.


latest tamil newsஅந்த பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே, தி.மு.க., அரசு திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டை புனைந்திருக்கிறதோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்த போது, அவ்விஷயம் யாராலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. அவ்விஷயம் கல்வி நிலையம், சம்பந்தப்பட்ட மாணவியோடு முடிந்துவிட்டது. மாணவியரிடம் அத்துமீறுவோர் யாராக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளியிடம் ஜாதி, மத பேதம் பார்க்கக் கூடாது. பத்மா சேஷாத்ரி பள்ளியை, தமிழக அரசே எடுத்து கொள்வது என்ற ஆலோசனை சரி என்றால், தி.மு.க., பொறுப்பில் இருப்பவர் யார் மீதாவது, பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டால், கட்சியையே கலைக்க வேண்டும் என்பதும் சரி தானே!

Advertisement
வாசகர் கருத்து (168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-202110:21:11 IST Report Abuse
Jit Onet ஒரு நாள் ஒரு முறை ஒரு கிராதக ஆசிரியரால் நடந்திருந்தால் வெரி விஷயம். ஆனால் பள்ளி நிர்வாகம் சரியில்லாதலால் தான் இம்மாதி அநியாயம் பல வருதாங்களாக நடப்பதாக செய்தி வருகிறது. இது உண்மையானால் அந்த நிர்வாகம் மொத்தமாக மாற்றப்பட வேண்டும். அரசு பள்ளிகளும் ஒழுங்காக இயங்குவதில்லை - இன்னும் மட்டமாக இருக்கின்றன (சில விதி விளக்குகள் உண்டு ).
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
03-ஜூன்-202117:36:58 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த விஷயத்தில் ஸ்டாலின் அவர்கள் முள்ளில் விழுந்த சேலையை எப்படி பாதுகாப்பாக விடுவிக்க வேண்டுமோ அது போல் செயல் படவேண்டும். தப்பு செய்தவருக்கு உதவி புரிந்தவருக்கும் தண்டனை (ஜாதி, மதம் என்று பாராமல்) பெற்று தரவேண்டும் என்பதை மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பள்ளிக்கு அநீதி இழைத்தால் விளைவு மக்கள் மத்தியில் வெறுப்பாக மாறிவிடும். மற்றவர்கள் சீண்டியும், கேவலப்படுத்தியும் கூட இந்த சமூகம் ஒன்றுமட்டும்தான் இன்னும் அந்நிய படையெடுப்பு, அந்நிய மதமாற்றம் என எதிர்க்கும் விலை போகவில்லை என தெரிந்துகொள்ளவும்.
Rate this:
Cancel
baygonspray - Aryan,ஈரான்
03-ஜூன்-202102:57:09 IST Report Abuse
baygonspray மீண்டும் தேர்தல் வரும் ,அப்போ பிஜேபி எதனை சீட் வாங்கும் ? இப்போ இருக்கும் நான்கு பேரிடம் கேட்டு செயல்படுங்கள் , நுரை தள்ளி ஜெயித்த சீட்டுகள்
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202107:59:23 IST Report Abuse
naadodiஇதுக்கும் பி.ஜே.பி.க்கும் என்ன சம்பந்தம்?...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
03-ஜூன்-202111:29:48 IST Report Abuse
Visu Iyer400 ஏக்கர் நிலத்தை பாதிவிலைக்கும் குறைவாக பாபா ராம் தேவ்க்கு கொடுத்தது நினைவில் வரவில்லையா. மற்றவருக்கு என்றால் தக்காளி சட்னி என்று யாரோ சொல்வார்களே அது போல இருக்குதா.....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
04-ஜூன்-202115:13:18 IST Report Abuse
madhavan rajanதமிழ் நாட்டு ஆளும் கட்சியின் லட்சணத்தில் இன்னொரு மாநிலத்தை எதுக்கு பாக்குறே....
Rate this:
selva - Chennai,இந்தியா
05-ஜூன்-202109:05:09 IST Report Abuse
selvaBACKDOOR Boys...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X