பொது செய்தி

தமிழ்நாடு

பதவியை தக்க வைக்க இப்படியுமா? ; கோவை இ.எஸ்.ஐ., 'டீன்' நாடகமாடுவதாக புகார்

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
கோவை : கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன், சமீபத்தில் தனியார் 'டிவி' பேட்டியில், 'நானே... பதவியை விட்டுவிட்டு கட்சி மாறலாமென நினைக்கிறேன்' என, பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை 'டீன்' ஆக கடந்த பிப்., மாதம், மாஜி அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி தயவில், பொறுப்பேற்றார் ரவீந்திரன். இவர் பொறுப்பேற்ற நாள் முதலே மருத்துவமனையில் பல்வேறு குளறுபடிகள்

கோவை : கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன், சமீபத்தில் தனியார் 'டிவி' பேட்டியில், 'நானே... பதவியை விட்டுவிட்டு கட்சி மாறலாமென நினைக்கிறேன்' என, பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை 'டீன்' ஆக கடந்த பிப்., மாதம், மாஜி அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி தயவில், பொறுப்பேற்றார் ரவீந்திரன். இவர் பொறுப்பேற்ற நாள் முதலே மருத்துவமனையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன. மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைக்கு, 7,000 ரூபாய், சடலத்தை ஒப்படைக்க 3,000 ரூபாய், சி.டி., ஸ்கேன் எடுக்க, 1,000 ரூபாய் என, வசூலிக்கப்படுகிறது.பொதுமக்களுக்காக இருப்பு வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி, தனியார் அமைப்புகளுக்கும், தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கும் டீன் அறையில் வைத்தே வழங்கப்பட்டது. மருத்துவமனையில் நோயாளிகளை பராமரிக்க, 'பெய்டு அட்டெண்டர்கள்' என்ற முறையில் கட்டணக் கொள்ளை நடந்தது. இவ்வாறு இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன.

இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருந்தும், நோயாளிகளை அனுமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த சமயத்தில், முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கொரோனா நோயாளிகள் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே, இவ்வளவு புகார்கள் எழுந்ததால், அவருக்கு பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை மறைக்கும் முயற்சியாக, செவிலியர் தினத்தன்று, செவிலியர் காலில் விழுந்து நாடகமாடினார், என சக அதிகாரிகளே குற்றம்சாட்டுகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், தனியார் 'டிவி'க்கு சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், 'முதல்வரை அப்பா மாதிரி பார்க்கிறேன். அவர் டாக்டர் மாதிரி பேசுகிறார். என் பதவியை விட்டுவிட்டு கட்சி மாறலாம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டேன்' என, புகழ்ந்து தள்ளியுள்ளார்.'ஒரு அரசு அதிகாரி கடமையை சரியாக செய்யாமல், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, இப்படியெல்லாம் நாடகமாடுகிறார். இதுபோன்ற ஆட்கள் எல்லாம், இவ்வளவு பெரிய பதவிக்கு தகுதியானவர்களே அல்ல' என, சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து கருத்து கேட்பதற்காக டீன் ரவீந்திரனை பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை; விளக்கம் கொடுத்தால் வெளியிட, 'தினமலர்' தயாராக உள்ளது. முதல்வராக ஸ்டாலின், பதவி ஏற்றபோது, 'என்னை புகழ் பாடுவது, துதி பாடுவதை நிறுத்தி விட்டு கடமையை செய்யுங்கள்' என்றார். அது இந்த சமயத்தில் டீன் ரவீந்திரனுக்கு கச்சிதமாக பொருந்தும் என, டாக்டர்கள் பலரும் விமர்சிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
02-ஜூன்-202114:57:04 IST Report Abuse
NARAYANAN.V கும்மியடிக்கப் பார்க்கும் டாக்டர் தலையில் ஆட்சியாளர்கள் குட்டு வைத்து காப்பு போடவேண்டும்.
Rate this:
Cancel
02-ஜூன்-202114:38:02 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு ரவீந்திரன்-ரவீந்திரநாத் .. என்ன வித்தியாசம்.. ஏமாறு பேர்வஜித்க்கு
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-ஜூன்-202113:27:10 IST Report Abuse
அசோக்ராஜ் //" முதல்வரை அப்பா மாதிரி பார்க்கிறேன். அவர் டாக்டர் மாதிரி பேசுகிறார்"// இவனுக்கு இப்பவே கடிவாளம் போடணும். அடுத்தது தம்பி உதயநிதியை கம்பவுண்டரா பார்ப்பன். தங்கை செந்தாமரையை நர்சாக பார்ப்பன். மாப்பிள்ளை சபரியை வார்டு பாயாகப் பார்ப்பன். வஸ்தாது களம் காண வேண்டிய நேரம் இது. சும்மா விடாதீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X