பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலையின் ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, 63 பேரை, தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்விற்கு உட்படுத்தினர்.பரிசோதனைக்கு உள்ளானவர்களில், குறைந்தபட்சம் ஒரு, 'டோஸ்' பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி
Corona Vaccine, Immunity, Vaccine

புதுடில்லி : கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலையின் ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, 63 பேரை, தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்விற்கு உட்படுத்தினர்.பரிசோதனைக்கு உள்ளானவர்களில், குறைந்தபட்சம் ஒரு, 'டோஸ்' பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 26 பேரின் உடலில் ஏற்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் சில விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


latest tamil news


இவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் உடைய மூலக்கூறுகளின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் கண்காணிப்பை தொடர்ந்தனர். அப்போது, மனித உடலில் நோய் எதிர்ப்பு திறன் உடைய செல்கள், கொரோனாவை உருவாக்கும் வைரசின் திறனை செயலற்றதாக மாற்றுவது உறுதியானது. பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசையும் எதிர்க்கும் திறன், அவர்களிடம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஜூன்-202107:52:00 IST Report Abuse
S. Narayanan Good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X