சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயிலில் தீ

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோயில் . இங்கு தமிழகம் , கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேண்டி செல்வர்.மாசிப் பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா - 10 லட்சம் பக்தர்கள் கூடுவர்.

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news



குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோயில் . இங்கு தமிழகம் , கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேண்டி செல்வர்.
மாசிப் பெருந்திருவிழா- 10 நாள் திருவிழா - 10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். இங்கு பெண்கள் பொங்கலிட்டு வேண்டுவது சிறப்பு.


latest tamil news



ஊரடங்கு இருப்பதால் யாரும் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில் இன்று ( ஜூன்2)காலையில் கோயில் மூலஸ்தானம் பகுதியில் இருந்து பெரும் புகை கிளம்பியது. இதனை பார்த்த பக்தர்கள், கோயில் நிர்வாகத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோயிலில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202122:19:57 IST Report Abuse
Pugazh V அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா 02-ஜூன்-2021 14:11 இருபுறமும் ஆபிரகாமிய அரசுகள்/ அதாவது இந்த அரசுகள் அம்மனை விட சக்தி வாய்ந்தவை. அம்மன் கோவிலுக்கே தீ வைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள்? ஆனால் அவர்களைத் தடுக்கும் சக்தி கூட அம்மனுக்கு இல்லை?? / என்ன எழுதுகிறீர்கள்??
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202122:17:39 IST Report Abuse
Pugazh V மிகச்சரியான கேள்வி , ப்ரதீஷ் பா. சாரதி. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202122:16:06 IST Report Abuse
Pugazh V அம்மனுக்கு கோபம், பிற மதத்தினர் சதி என்றெல்லாம் எழுதி இந்துக்கள் கடவுளை நிந்தனை செய்யாதீர்கள் ப்ளீஸ். தீயசக்தி ஆட்சி க்கு வந்ததால் கோபத்தில் தனது கோவிலுக்கு தானே அம்மன் தீ வைத்துக் கொண்டாரா? அப்படி சக்தி இருந்தால் ஏன் அந்த சக்திகளை ஆட்சி க்கு வரவைத்து அப்புறம் தீ வெச்சுக்கணும். ஆட்சி க்கே வராம பண்ண வேண்டிய து தானே? சர்ச்சுக்காக இந்த தீ வைப்பு என்றால்.. அதைத் தடுக்கும் சக்தி அம்மனுக்கு இல்லையா? ஏன் இப்படி உங்கள் தெய்வத்தை நீங்களே அவமதிக்கிறீர்கள்?÷
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X