மீண்டும் திரிணமுல் காங்.,குக்கு படையெடுக்கும் தலைவர்கள்

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு சென்ற பலர், மீண்டும் திரிணமுல் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவர் முகுல் ராய் பெயரும் அதில் உள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. முன்னதாக, 2019ல் நடந்த லோக்சபா
WestBengal, TMC, BJP, Return, HomeParty, MukulRoy, Dipendu Biswas, Sonali Guha, Mamata, மேற்குவங்கம், திரிணமுல் காங்கிரஸ், மம்தா, கட்சி, பாஜக

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு சென்ற பலர், மீண்டும் திரிணமுல் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவர் முகுல் ராய் பெயரும் அதில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. முன்னதாக, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் இருந்து, திரிணமுல் காங்.,கில் இருந்து விலகிய பல மூத்த தலைவர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.,வுக்கு சென்ற பலர், மீண்டும் திரிணமுல் காங்.,குக்கு புலம் பெயர ஆர்வம் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


நீரில்லாத மீன் போல் உணர்வதாக, முன்னாள் பெண் எம்.எல்.ஏ., சோனாலி குஹா, சமீபத்தில் மம்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். திரிணமுல் கொடியை ஏந்த துடிப்பதாக, முன்னாள் கால்பந்து வீரர் திபேந்து பிஸ்வாஸ் கடிதம் எழுதியிருந்தார். இவ்வாறு பலர், திரிணமுல்லில் மீண்டும் சேருவதற்கு துாது விட்டு வருகின்றனர். ''பா.ஜ.,வில் தற்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக உள்ள, 34 பேர் திரிணமுல் காங்.,கில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்,'' என, திரிணமுல் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார்.


latest tamil news




தகவல்


திரிணமுல்லில் இருந்து முதல் முதலில் விலகிய, மூத்த தலைவர் முகுல் ராய், மீண்டும் திரும்ப போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ''சட்டசபை தேர்தலில் வென்று பா.ஜ., ஆட்சி அமைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதனால், அந்த கட்சியில் இருந்து விலகி பலர், பா.ஜ.,வில் சேர்ந்தனர். அவர்கள் எதற்காக கட்சி மாறுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ஷாமிக் பட்டாசார்யா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202122:09:35 IST Report Abuse
Pugazh V அந்த கட்சி மாறிகளை பீஜேபீ தான் இப்போது அடிச்சு துரத்துகிறது.என்று நினைக்கிறேன். இவர்களுக்கு ஓட்டு வங்கி இருக்கும். அதை வைத்து நாலு ஸீட் ஜெயிக்கலாம் என்று நினைத்து கொஞ்சம் பணத்தை விட்டெறிந்து பீஜேபீ யில் இழுத்தது. ஒண்ணும் பயனில்லை என்று தெரிந்ததும் துரத்தி விட்டது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202119:07:19 IST Report Abuse
Pugazh V பீஜேபீ யின் கேவலமான அரசியல் கிளிஞ்சு தொங்குது. ஆனாலும் வுடாம முட்டுக்கொடுத்து எழுதுவாய்ங்க
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-202119:05:57 IST Report Abuse
Pugazh V பாவம் அமித்ஜியின்.மாயவலையில் சிக்கி சின்னாபின்னமாகிட்டாங்க..இப்போது சோத்துக்கே வழியில்ல..திரும்பி வர்றாங்க. தலைவி மம்தா பானர்ஜி அவர்கள் இவர்களை ஏற்றுக்கொண்டு உணவளித்து காப்பாற்றுவார். திருந்திட்டாங்கன்னா மன்னிக்கலாம். தவறிழைப்பது மனிதம். மன்னிப்பது தெய்வீகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X