அமேசான் இணையதளத்தில் செய்தி, கட்டுரைகள் சேர்ப்பு

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில், செய்தி, பொழுதுபோக்கு, மற்றும் பல்வேறு கட்டுரைகளை சார்ந்த விஷயங்களை ரகசியமாக இணைத்து வருகிறது. விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.அமேசான் நிறுவனம், தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் சேர்க்கப்பட்ட இந்த ‛பிரத்யேக கட்டுரைகள்' என்ற புதிய பகுதியில், எக்ஸ்குளூசிவ்,
amazon, featured articles, அமேசான், பிரத்யேக கட்டுரைகள்

வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில், செய்தி, பொழுதுபோக்கு, மற்றும் பல்வேறு கட்டுரைகளை சார்ந்த விஷயங்களை ரகசியமாக இணைத்து வருகிறது. விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனம், தனது இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் சேர்க்கப்பட்ட இந்த ‛பிரத்யேக கட்டுரைகள்' என்ற புதிய பகுதியில், எக்ஸ்குளூசிவ், டிரெண்டிங் செய்திகள், பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் நிர்வாகம், விளையாட்டு, வணிகள் மற்றும் நிதி, உடல்நலம், சமூகம் மற்றும் லைப் ஸ்டைல் புத்தகம், உணவு, நடப்பு விவகாரம், கற்பனை கதைகள், பயணக்கட்டுரைகள், ஆட்டோமொபைல், போன்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. பல்வேறு செய்தி நிறுவனங்களில் கட்டுரைகள் மற்றும் பதிப்பகங்களி் செய்திகளை ஒரே இடத்தில் படிக்கும் வகையில் ஏற்படுத்தி உள்ளது. இந்த வசதி குறித்து ஒரு சில பயனாளர்களுக்கே தெரிய வந்துள்ளது.

இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த வசதி குறிப்பிடப்படவில்லை. அந்த இணையதளத்தில், தேடுதல் பக்கத்தை பயன்படுத்தி ‛‛ பிரத்யே கட்டுரைகள் '' தேடுவதன் மூலம் பார்க்க முடியும். 5 நிமிடங்களுக்குள் படிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், சில செய்திகளை படிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை தாண்டும் வகையிலும் உள்ளது.

இந்த பகுதியில் உள்ள செய்திகள், அவுட்லுக், இந்தியா டுடே, வெஸ்ட்லேண்ட், ஹார்பர் கலின்ஸ், ஹசேட்டே இந்தியா உள்ளிட்ட இணைய பக்கங்களில் இருந்தும் அமேசான் பிரைம் வீடியோவில் இருந்தும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

டெக் கிரஞ்ச் தகவல்படி, சில பயனாளர்கள், பிரத்யேக கட்டுரைகள் குறித்து தெரிந்து வைத்துள்ளனர். இணையம் மற்றும் மொபைல் ஆப்பில் வெளிப்படையாக பார்க்க முடியவில்லை. இதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்னர், இதனை ரகசியமாக சோதனை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.


latest tamil newsஅமேசான் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவங்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நடப்பு விவகாரங்கள், புத்தகங்கள், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறை குறித்த செய்திகளை சேர்த்து பரிசோதனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூன்-202122:37:10 IST Report Abuse
Arun, Chennai is there any way to prevent them from publishing news.... already private medias are overwhelmingly supporting current TN Politics... these private channels will provoke hindus n report them as secular intolerance....God should save India n Dharmic culture... theyll promote anti-hinduism..
Rate this:
Cancel
02-ஜூன்-202119:56:06 IST Report Abuse
கர்ணன் எதிர்காலத்தில் கூகுளுக்கு மாற்றாக அமேசான் இருக்கும்
Rate this:
Cancel
02-ஜூன்-202114:27:54 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அமேசான் பலமுறை இந்துக்கள் மற்றும் புத்த மத மக்களின் உணர்வை அவமதிக்கும் விதமாக நடந்துள்ளது. இனி அது செய்திகளிலும் வெளிப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X