பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்: சிதம்பரம்| Dinamalar

பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்: சிதம்பரம்

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (63)
Share
புதுடில்லி: பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., சிதம்பரம், பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த நிதி ஆண்டில் (2020-21) மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தகவல் வெளியிட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத
Economists, Advice, Heed, Government, GDP, Chidambaram, Congress, CentralGovt, UnionGovt, பொருளாதாரம், ஜிடிபி, சிதம்பரம், காங்கிரஸ்

புதுடில்லி: பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., சிதம்பரம், பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த நிதி ஆண்டில் (2020-21) மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தகவல் வெளியிட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக சரிவை சந்தித்துள்ளாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், சிதம்பரம் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

முன்னாள் நிதியமைச்சரும், காங்., எம்.பி.,யுமான சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 காலாண்டு பொருளாதார செயல்திறனை பார்க்கிறபோது, 2020 -21 ஆனது, 40 ஆண்டு கால பொருளாதாரத்தில் மிக இருண்ட ஆண்டு ஆகும். அதே போன்று 2021-22 நிதி ஆண்டும் போய்விடக்கூடாது.


latest tamil news


மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். தனது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும். தற்போதையை பொருளாதார நிலைக்கு காரணம், கொரோனா பெருந்தொற்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அதனுடன் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசின் திறமையின்மையும், திறமையற்ற பொருளாதார நிர்வாகமும் சேர்ந்துள்ளது.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் நல்ல யோசனைகள் இதுவரை மறுக்கப்பட்டுள்ளன. உலகளவிலான அனுபவங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.


latest tamil news


அரசு செலவினம் அதிகரிப்பதும், ஏழைகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்வதும், ரேஷனில் தாராளமாக வினியோகம் செய்வதும் பொருளாதாரத்துக்கு தேவையானது ஆகும். எங்கள் வேண்டுகோள்கள் அவர்கள் காதுகளில் விழவில்லை. இதனால் பொருளாதாரம் மைனஸ் 7.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு சலுகைகள் வழங்குவது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X