பொது செய்தி

தமிழ்நாடு

15 நாள் எடுத்த ஊரடங்கு முயற்சி வீணாகலாமா?

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை: டில்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை, தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில், இரண்டு வாரமாக உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு, வரும், 7ம் தேதி காலை, 6:00 மணியுடன், நிறைவடைய உள்ளது. அதன்பின் ஊரடங்கை தளர்த்த, அரசு ஆலோசித்து வருகிறது. முயற்சி வீணாகும் இதற்கிடையில் முதல்வர்

சென்னை: டில்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை, தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில், இரண்டு வாரமாக உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு, வரும், 7ம் தேதி காலை, 6:00 மணியுடன், நிறைவடைய உள்ளது. அதன்பின் ஊரடங்கை தளர்த்த, அரசு ஆலோசித்து வருகிறது.latest tamil news

முயற்சி வீணாகும்

இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலினும், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியமும் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, கொரோனா குறைந்து வருவதாக பேட்டி அளிக்க துவங்கி உள்ளனர். இதற்கு காரணம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை. எனவே, ஊரடங்கை எடுத்து விடும் நோக்கத்தில், அமைச்சர்கள் பேசி வருவது தெரிகிறது.

இப்போதும் சராசரியாக ஒரு நாளைக்கு 27 ஆயிரம் பாதிப்புகள் தமிழகத்தில் பதிவாகின்றன. இன்னும் முழுமையாக கொரோனா பாதிப்பு நீங்கவில்லை. இந்த நேரத்தில், ஊரடங்கை நீக்கினால், நாம் இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும். ஒரு சதவீதம் கூட வெற்றி கிடைக்காது.


மாற்று வழியை யோசிக்க வேண்டும்


latest tamil news


அரசுக்கு வருவாய் இல்லை என்று நினைத்தால், மாற்று வழியை தான் யோசிக்க வேண்டும். அப்படி முழு ஊரடங்கை நீக்குவதாக இருந்தால்,
*பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கக்கூடாது.
*வழிபாட்டு தலங்களை திறக்கக்கூடாது.
* 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள், மால்களை திறக்கக்கூடாது.
*டூவிலர் உட்பட வாகன போக்குவரத்தை அனுமதிக்கக்கூடாது.
*போலீஸ் கெடுபிடியை விடக்கூடாது.
*வருமானம் தரும் 3 தொழில்களை வேண்டுமானால் அனுமதிக்கலாம்.


மூன்று தொழில்கள்


1. பார்கள் தவிர, டாஸ்மாக் கடைகளை மட்டும் திறக்கலாம். அதையும் சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து தான் கடைக்கு வாடிக்கையாளர்கள் வர வேண்டும் என கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதை போலீஸ் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். விதிமுறை மீறுவோர் யாராக இருந்தாலும், தயவு தாட்சணியம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தான் மதுபானங்கள் விற்கப்படம் என அறிவிக்க வேண்டும். அதற்கூறிய ஆதாரங்களை பொதுமக்கள் காட்ட வேண்டும்


latest tamil news


Advertisement


2. பத்திரப்பதிவு அலுவலகங்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி திறக்கலாம்.
3. கட்டட தொழில்களையும் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடப்பதற்கு அனுமதிக்கலாம்.


பொது போக்குவரத்திற்கு தடை வேண்டும்


*சிறுவியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதிக்கலாம்.
* ஆட்டோ, கார்களில் எக்காரணம் கொண்டும் 3 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்கக்கூடாது.* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தையும் தடை செய்ய வேண்டும்.
*இறப்பு மற்றும் மருத்துவ காரணங்கள் இருந்தால் மட்டுமே வாகனங்கள், ஆம்புலன்ஸ் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்
*சுபகாரியங்கள் எதுவும் நடைபெற விடக்கூடாது.


latest tamil news


இதை செய்யாவிட்டால், இப்போது குறைவது போல் தோன்றும் கொரோனா பாதிப்பு, ஆகஸ்ட் மாதம் அதிகரித்து விடும். அதன் பிறகு, அதை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகிவிடும்.


சஸ்பெண்ட்


latest tamil news


கட்டுப்பாடுகள் மீறப்படும் இடங்களில் சிரயாக கண்காணிக்காத அதிகாரிகள் மற்றும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். எந்த விதிமுறைகள் மீறப்பட்டாலும், அந்த பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளை பொறுப்பேற்க வைக்க வேண்டும்.


3 கோடி பேருக்கு தடுப்பூசி


latest tamil newsதமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது எனக்கூறி நமக்கு நாமே திருப்தி படுவதில் அர்த்தமில்லை. ஊரடங்கை நீக்கினால், இந்த 15 நாட்களில் நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். தமிழகத்தில் 3 கோடி பேருக்கு, தடுப்பூசி போட்ட பிறகு தான், அனைத்து இடங்களிலும் முழுமையாக திறக்க வேண்டும். அரசு இதை செய்யுமா?

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamurthy N - Chennai,இந்தியா
03-ஜூன்-202112:46:16 IST Report Abuse
Ramamurthy N தேவையில்லாத கருத்துக்களை கூறாமல் உருப்படியான யோசனைகளை தெரிவிக்கலாம். சென்ற முறையைவிட வீரியம் அதிகமுள்ள கோரோணாவினால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் அக்கறையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும்போது, நம் தினமலர் பத்திரிகை நல்ல யோசனைகளை கூறுவது போல் மக்களும் பத்திரிக்கை மூலம் நல்ல கருத்துக்களை தெரிவிக்கலாம். தயவு செய்து மத்திய மற்றும் மாநில அரசுகளை குறை கூறாதீர்கள். பெரும்பாலும் வாசகர்கள் தன்னுடைய கட்சிகளை சார்ந்து கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இது தவறு
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜூன்-202104:18:46 IST Report Abuse
g.s,rajan No lock down please here after,Corona is not a disease it is only a deficiency. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
02-ஜூன்-202122:16:29 IST Report Abuse
ஆப்பு ஜனவரிலேருந்து கிராமசபைன்னு இவிங்க கூட்டுன கூட்டத்துக்கு கைமேல் பலன் தெரியுதே..ஊரடங்கு பலன் யெரிய ப்ரு மாசமாச்சும் வாணாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X