பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில்

சென்னை: ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதி தருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.


latest tamil news



ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூன்-202115:04:39 IST Report Abuse
ஆரூர் ரங் மின்தடையை கொண்டு வர வசதியாக விரைவில் ஊரடங்கு நீக்கப்படும். 😆 இல்லையா செந்தில்?
Rate this:
Cancel
Sittu Kuruvi - covai,இந்தியா
03-ஜூன்-202111:01:03 IST Report Abuse
Sittu Kuruvi மிக பெரிய ஊழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. தனியார் மின் உற்பத்தியாளர்கள் அதிகமாவார்கள். கரூரில் இவரின் தேர்தல் பிரச்சாரத்துக்காக பணம் செலவழித்தவர்களுக்குதான் பெரிய பெரிய கான்ட்ராக்ட்கள் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. மேலும் கரூர் பஸ் நிலையத்தை இவரின் சொந்த ஊர் பக்கம் கொண்டுபோகும் முயற்சிகள் வேகமாக நடைபெறுகிறது. அடுத்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு குறைந்தது 5000 செலவு செய்ய இப்போதே ஏற்பாடு செய்ய தொடங்கிவிட்டார். கடந்த தேர்தலில் பெண்களுக்கு கொலுசு கொடுத்துள்ளார்
Rate this:
Cancel
Krush - Pallavaram, Chennai,இந்தியா
03-ஜூன்-202110:26:06 IST Report Abuse
Krush அவரு நேத்துதான் சொன்னாரு ஊரடங்கு நீட்டிக்க படமாட்டாதுன்னு. இன்னிக்கு இவரு ஊரடங்கு வரை மின்வெட்டு இருக்காதுன்னு.. மொத்த தமிழகமும் சங்கே முழங்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X