தமிழகத்தில் 26 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 25,316பேரும் மற்ற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 25,317 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 483 பேர் உயிரிழந்து உள்ளனர். 32,263 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 21 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 25,316பேரும் மற்ற மாநிலத்தவர் ஒருவரையும் சேர்த்து 25,317 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 483 பேர் உயிரிழந்து உள்ளனர். 32,263 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 21 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 74,329மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 25,317 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,48,346 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,80,16,841 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 14,088 பேர் ஆண்கள், 11,229 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 12,65,038 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 8,83,270 ஆகவும் அதிகரித்து உள்ளது. 32,263 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,34,439 ஆக உயர்ந்தது.

483 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 204 பேர் தனியார் மருத்துவமனையிலும், 279 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,205 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news




மாவட்டம் வாரியாக படுக்கை விவரம்



latest tamil news



latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
03-ஜூன்-202111:05:14 IST Report Abuse
arudra1951 பரமார்த்த குருவும் சீடர்களும் கதைபோல -பாவிகளா எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்தால் பரவல் எண்ணிக்கை பதிவேட்டில் பதிக்கப்படாது எண்ணிக்கை குறைவதால் வியப்பென்ன
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-ஜூன்-202107:58:33 IST Report Abuse
duruvasar மாமியார் உடைச்சா மண்பானை. மருமகள் உடைத்தால் பொன் மானை. ஸ்டாலின் சக்திவாய்ந்த மந்திரகோலை வைத்திருப்பதால் இது சாத்தியமாகிறது. தமிழர்களளுககு விடியல் கிடைத்துவிட்டது
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
02-ஜூன்-202122:22:03 IST Report Abuse
raghavan ஊரடங்கு தளர்ந்து மீண்டும் மக்கள் பழையபடி வெளியில் செல்ல ஆரம்பித்தால் சென்னையில் படு தீவிரமாக பரவ ஆரம்பித்துவிடும். ஆகவே ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டவர்களை மட்டுமே வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X