மலேசியாவுடன் வான் எல்லையில் மோதும் சீனா

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
கோலாலம்பூர்: சீனா தொடர்ந்து பல ஆண்டுகாலமாக அண்டை நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதேபோல சமீபத்தில் தெற்காசிய நாடான மலேசியாவுடன் கடல் மற்றும் வான் எல்லையில் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில் சீன கப்பல்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மலேசிய கடல் எல்லைக்குள் அத்துமீறி

கோலாலம்பூர்: சீனா தொடர்ந்து பல ஆண்டுகாலமாக அண்டை நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதேபோல சமீபத்தில் தெற்காசிய நாடான மலேசியாவுடன் கடல் மற்றும் வான் எல்லையில் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது.



latest tamil news



இதுகுறித்து மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில் சீன கப்பல்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மலேசிய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக தென் கொரியா, தைவான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.கடல் எல்லையில் சர்வதேச சட்டத்தைப் பின்பற்றாமல் அவ்வப்போது சீன கடற்படை மற்றும் எண்ணெய் கப்பல்கள் ஆகியவை அத்துமீறி நடந்து கொள்வது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.இதில் ஐநா தலையிட்டு சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கூறப்படும் நிலையில் அவ்வப்போது அமெரிக்கா இதில் தலையிடுவது சீனாவை அதிர்ச்சி அடையச் செய்கிறது.

கடல் எல்லையில் சீனாவின் அத்துமீறலும் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் வான் எல்லையிலும் அவ்வப்போது சீனா அத்துமீறலில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. சீனாவின் 16 போர் விமானங்கள் மலேசியா வான் எல்லைக்குள் தற்போது நுழைந்துள்ளன. இதுகுறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டபோது சீன விமானப்படை வழக்கம்போல பயிற்சி மேற்கொள்வதற்காக பறந்ததாகத் தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச வான் எல்லைக்குள் நுழைய சீன போர் விமானங்களுக்கு அனுமதி உண்டு என சீன ராணுவம் தெரிவிக்கிறது. போர்னோ பகுதியில் இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ள நிலையில் மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஹிஜாமுதீன் உசைன் மலேசியாவில் உள்ள சீன தூதரகத்துக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil news



மலேசியா மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே உள்ளிட்ட பல நாடுகளுடன் இதேபோல சீனா மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
03-ஜூன்-202112:58:24 IST Report Abuse
Marai Nayagan நண்டு கொழுத்தால் வலையில் இருக்காது. ஜெர்மனி ஜப்பான் போல திமிர் கொண்டால் அடக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை சீனா கோழைகள்
Rate this:
Cancel
Ram - Chennai,இந்தியா
03-ஜூன்-202110:37:47 IST Report Abuse
Ram சீன எல்லோரிடமும் தைரியமுடன் பகைத்து கொல்கிறான் என்றல் அவனிடம் ஏதோ அனைவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறன் உள்ளது
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
03-ஜூன்-202110:32:02 IST Report Abuse
N Annamalai all neighbours must pratice like this in China s territory.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X