பொது செய்தி

இந்தியா

விமானத்தில் 21 முறை இலவசமாக பறந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
'பாரத ரத்னா' விருது பெற்ற பிரபல பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், 2015 முதல், 2019 வரை, ஏர் இந்தியா விமானங்களில், 21 முறை இலவசமாக பயணித்துள்ளார்.நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, இதுவரை, 48 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில், மறைவுக்குப் பின், 14 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. நான்கு பேர் மீதமுள்ள 34 பேரில், பொருளாதார
விமானம், பொருளாதார நிபுணர், அமர்த்தியா சென்

'பாரத ரத்னா' விருது பெற்ற பிரபல பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், 2015 முதல், 2019 வரை, ஏர் இந்தியா விமானங்களில், 21 முறை இலவசமாக பயணித்துள்ளார்.

நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, இதுவரை, 48 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில், மறைவுக்குப் பின், 14 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது.


நான்கு பேர்


மீதமுள்ள 34 பேரில், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், வேதியியலாளர் சி.என்.ஆர். ராவ் என்ற நான்கு பேர் மட்டுமே, தற்போது உள்ளனர். பாரத ரத்னா விருது பெறுவோர், தங்கள் வாழ்நாள் முழுதும், 'இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா' விமானங்களில், உயர் தர வகுப்பில் இலவசமாக பயணிக்கலாம்.

இந்நிலையில், 'பாரத ரத்னா விருது பெற்றோருக்கு, விமானங்களில் இலவசமாக பயணிக்க சலுகை வழங்கப்பட்டது எப்போது, விருது பெற்றோர் எத்தனை முறை இலவசமாக பயணித்துள்ளனர்' என்ற கேள்விகளை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் கேட்டிருந்தது.


முதல் வகுப்பு

அதில் குறிப்பாக, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னின் பயண தகவல்கள் கோரப்பட்டு இருந்தன.இந்நிலையில், அந்த தகவல்கள் வெளியிடப்பட்டன. 2015 முதல், 2019 வரை, ஏர் இந்தியா விமானங்களில், அமர்த்தியா சென், 21 முறை, முதல் வகுப்பில் இலவசமாக பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.

காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, இவர் பயணித்துள்ளார். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியையும், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களை விமர்சிக்கவும், இவர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

- புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
04-ஜூன்-202109:17:29 IST Report Abuse
mathimandhiri விசுவாசக் காரர்களுக்கு அசைன்மெண்டுக்கேற்ப இத்தாலிய பேமேன்ட் கிடைக்கலாம் என்கிறார்கள்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
03-ஜூன்-202121:31:29 IST Report Abuse
mathimandhiri இவன் ஒரு பெரிய மோசடிக்கு காரன். எப்போதும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளையே பரப்பி வருபவன். நம் நாட்டின் சாபக் கேடு.///இவன் மனைவி ரோத்ச்சைல்ட் உலகின் மிகப் பெரிய பணக்கார வாரிசாவாள் // நானூறு பில்லியன் டாலர் சொத்தாம்.//அவர்கள் பணம் பண்ணும் விதங்களை பற்றித் தெரிந்து கொண்டால் இவனை மாறு அளவுக்கு கூட மதிக்க தோணாது //போர்கள் மூள்வதற்கு, பங்கு மார்க்கெட்டில் மோசடி விளையாட்டு, வங்கித் துறையினை கண்ட்ரோல் செய்வது, இவற்றுக்கு பொருளுதவி செய்தல் இவை இக் குடும்பத்தின் முக்கிய வழிகள் என்கிறார்கள்//இந்தியாவில் ''சிவில் சொசைட்டி'' இவன் விளையாட்டு தான்.// இங்கு மனித உரிமை நசுக்கப் படுகிறதாம்/ அப்போ சீனாவில்? /மத்திய அரசு தன தவறான கொள்கைகளால் மக்களை பட்டினி போட்டு துடிக்க வைக்கிறதாம்/// 2004 / முதல் 2014 வரை இருந்த ஐ.மூ. கூட்டணி ஆட்சியின்போது இவன் காட்டில் மழை தான் ///அரசுக்கு உற்ற தோழனாக இருந்து அறிவுரை வழங்கியது , அதன் மூலம் மிகப் பெரிய தொகையை அறுவடை செய்தது இக் குழுமம். 3G அலைக் கற்றையை -ஈ ஆக்சன் முறையில் எலம் விட்ட வகையில் மட்டுமே பீஸ் முப்பத்தரை கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.// யார் வீட்டுப் பணம்?/// -இவனது மகன் ஜீன் டிரேஜ் சோனியாவின் தேசிய ஆலோசனைக் கவுன்சிலில் உறுப்பினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே சென்னின் லட்சணம்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
03-ஜூன்-202121:01:57 IST Report Abuse
mathimandhiri iv
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X