கொரோனா நிர்வாகத் தோல்வி உ.பி., தேர்தலில். எதிரொலிக்கும்?  

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
அடுத்தாண்டு துவக்கத்தில், உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மாநில அரசு அதை சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம், வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், கலக்கத்தில் உள்ள பா.ஜ., மேலிடம், அதை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை துவக்கியுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத்
கொரோனா, நிர்வாகம் ,தோல்வி ,தேர்தல். எதிரொலிக்கும்?

அடுத்தாண்டு துவக்கத்தில், உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மாநில அரசு அதை சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம், வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால், கலக்கத்தில் உள்ள பா.ஜ., மேலிடம், அதை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை துவக்கியுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. கடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்த மாநிலங்களில், உத்தர பிரதேசத்துக்கு முக்கிய இடம் உண்டு.கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வரலாற்று வெற்றியைப் பெற்று, ஆட்சி அமைத்தது. இந்நிலையில், அடுத்தாண்டு துவக்கத்தில், சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
கவலைமாநிலத்தில் ஆட்சியில் இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகளில் பல குழப்பங்கள் உள்ளதால், பெரிய அளவில் அவற்றால் பா.ஜ.,வுக்கு போட்டி ஏற்படுத்த முடியவில்லை.காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வருகைக்குப் பிறகும், காங்., அங்கு பெரிய பொருட்டாகவே இல்லை. அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு கூட, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி தயாராக இல்லாத நிலையே உள்ளது.இவ்வாறு அரசியல் சூழ்நிலை சாதகமாக இருந்தாலும், வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. அதனால், பா.ஜ., தலைமையும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கவலையில் உள்ளன.

அதற்கு காரணம், கொரோனா இரண்டாவது அலை பரவலை, மத்திய அரசு சரியாக சமாளிக்கவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவதால், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சற்று சரிந்துள்ளது. கடந்த தேர்தல்களில், உத்தர பிரதேசத்தில் வெற்றியை தேடித் தந்த அவரால், இந்த முறை முடியுமா என்பதில் சிறு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தது, வைரஸ் பரவலை, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசும் சரியாக கையாளவில்லை என, பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள், மக்களிடையே மட்டுமல்லாமல், அவருடைய சொந்தக் கட்சியிலேயே விமர்சனம் எழுந்துள்ளது.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பு குறைந்ததற்கு இதுவே முக்கிய காரணம். இதை கட்சி தலைமையும் உணர்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் இது குறித்த கவலையை தெரிவித்து உள்ளது.

சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபலே, லக்னோவில் அமைப்பின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்; மக்களின் மனநிலை குறித்து அவர் கேட்டறிந் து உள்ளார். அந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் ஹோசபலேயை, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோர் சமீபத்தில் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்திஉள்ளனர்.
இந்தக் கூட்டத்துக்கு, யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.


நடவடிக்கைபா.ஜ., முன் உள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதையடுத்து, தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை பா.ஜ., துவக்கி உள்ளது.தற்போது துணை முதல்வராக உள்ள கேசவ் பிரசாத் மவுரியா, மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், கட்சியின் செல்வாக்கை உயர்த்துவார் என, மேலிடம் நம்புகிறது. மாநிலத்தில், 12 சதவீதம் உள்ள பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


யோகிக்கு சவால்!கடந்த, 2017 சட்டசபை தேர்தலை, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், பா.ஜ., சந்தித்து, மிகப் பெரிய வெற்றியை பெற்றது. யாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என, பல யூகங்கள் வெளியாகின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத யோகி ஆதித்யநாத்தை, பா.ஜ., மேலிடம் முதல்வராக அறிவித்தது.தற்போது, 48 வயதாகும் யோகி, தன் வாழ்நாளில் மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளார். கட்சியில், அமைச்சரவையில், எதிர்க்கட்சிகளில் யாருடனும் நட்பு பாராட்டமாட்டார் என்ற விமர்சனம் அவருக்கு எதிராக உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை, அவர் சரியான முறையில் கையாளவில்லை என்ற விமர்சனமும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஆதித்யநாத்திடம் சில மாற்றங்கள் தெரிவதாக, கட்சியினர் கூறி வருகின்றனர். கட்சியினருடன் ஆலோசனை நடத்துவது, கிராமங்களுக்கு பயணம் மேற்கொள்வது என, தன் பாணியை மாற்றியுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமையில் இருந்தபோதும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், 'வீடியோ
கான்பரன்ஸ்' முறையில் ஆலோசனை நடத்தினார்.கடின உழைப்பாளி என்று பெயர் பெற்ற அவர், பல புதிய அறிவிப்புகளையும் தற்போது வெளியிட்டு வருகிறார். வரும் சட்டசபை தேர்தல், அவருடைய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும் அல்லது மீண்டும் கோரக்பூர் மடத்தின் தலைமை பூஜாரியாக, தன் சன்னியாச வாழ்க்கை தொடர வேண்டியிருக்கும் என, கட்சியினர் கூறுகின்றனர்.


பா.ஜ.,வின் கணக்கு!உத்தர பிரதேச சூழ்நிலை பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதற்கு முக்கிய காரணம், ஓட்டு கணக்கே.கடந்த, 2017 தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 40 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு தலா, 20 சதவீதத்துக்கு சற்று அதிகம் கிடைத்தன. அந்த தேர்தலில், 403 தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு 325 இடங்கள் கிடைத்தன.
வரும் தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் சற்று குறைந்து, மற்ற கட்சிகளுக்கு அதிகரித்தால், அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதுவே, பா.ஜ., தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜூன்-202107:08:44 IST Report Abuse
அறவோன் நதிகளில் ஓடும் பிணங்களின் ஆன்மாக்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்யும்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜூன்-202107:06:30 IST Report Abuse
அறவோன் 🎤🎵 சங்குச்சத்தம் கேக்குதய்யா..., சங்கு.....சத்தம் கேக்குதய்யா....🎵🎤
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
03-ஜூன்-202118:52:32 IST Report Abuse
Vijay D Ratnam இதுக்கு எதுக்கு பாஸ் தலையை பிச்சிக்கணும். மைனாரிட்டிகளுக்கு என்று கொடுத்துக்கொண்டு இருக்கும் சலுகைகளை அடியோடு ரத்து செய்து ஒரு உத்தரவிட்டால் போகிறது. மெஜாரிட்டி ஹிந்துக்களின் 80 சதவிகித வாக்குகளை அள்ளினால் வெற்றி உறுதியாகிடும்ல. பாஜக என்ன செய்தாலும் பள்ளிவாசல்களும் பாதிரியார்களும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய கிருஸ்தவ வாக்குகள் கால் சதவிகிதம் கூட பாரதிய ஜனதாவுக்கு எந்தக்காலத்திலும் விழாது. ஹிந்துக்கள் வாக்குகளை முழுமையாக குறிவைத்தால் போகிறது. பத்து சதவிகித மானங்கெட்ட ஹிந்து வாக்குகளை தவிர்த்து மீதமுள்ள ஹிந்து வாக்குகளை குறிவைத்து அரசியல் செய்தால் போதும். அடுத்த முறை மட்டுமல்ல எப்போதும் பாஜக தான் வெல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X