புதிய பார்லி., கட்டுமான பணி : உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி : சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த டில்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் டில்லியில் புதிய பார்லி., கட்டடத்திற்கு அருகே பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு புதிய இல்லம் கட்டுவது, ஜனாதிபதி மாளிகை முதல், 'இந்தியா கேட்' வரையிலான, 3
Delhi HC verdict dismissing plea புதிய பார்லி., கட்டுமான பணி  : உச்சநீதிமன்றம், அப்பீல்to halt Central Vista work during COVID challenged in SC

புதுடில்லி : சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த டில்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் டில்லியில் புதிய பார்லி., கட்டடத்திற்கு அருகே பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு புதிய இல்லம் கட்டுவது, ஜனாதிபதி மாளிகை முதல், 'இந்தியா கேட்' வரையிலான, 3 கி.மீ., துாரத்தை மறுசீரமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.


latest tamil newsகொரோனா பெருந்தொற்று காலத்திலும் கட்டட பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது. உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்' என, அன்யா மல்ஹோத்ரா சோஹைல் ஹஷ்மி ஆகியோர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான கடந்த மே. 31-ல் தீர்ப்பு வெளியானது. இதில் சென்ட்ரல் விஸ்டா திட்டம், மிக அவசியமான தேசிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' மனுதாரர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறது என தலைமை நீதிபதி, டி.என்.படேல் மற்றும் ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.இந்நிலையில் இந்த தீ்ர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
06-ஜூன்-202118:55:40 IST Report Abuse
Swaminathan Chandramouli இதில் இருந்து என்ன தெரிகிறது ? எதிர்க்கட்சிகளின் வெட்டி பேர்வழிகள் நிறைய உள்ளனர் அவர்களுக்கு எங்காவது அரிப்பு எடுத்தால் எருமை மாடுகள் போல சுவற்றில் முதுகை தேய்த்து கொள்ளுவார்கள்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
03-ஜூன்-202109:53:15 IST Report Abuse
vbs manian காங்கிரஸ் உடும்பு பிடியாக இதை பிடித்து கொண்டுள்ளது. அதே சமயம் நாட்டில் உள்ள மோசமான நிலைமையை கருதி இந்த திட்டத்தை மத்திய அரசு கொஞ்ச நாள் ஒத்திப்போடலாம். இப்போதைய முதன்மை தேவை ஊசி சிகிச்சை. அதற்கு நிறைய பணம் தேவை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-ஜூன்-202107:53:29 IST Report Abuse
duruvasar காங்கிரஸின் டூல்கிட்டில் முக்கிய அம்சங்களில் இது 2 ஆவதாக இருக்கிறது. எனவே அதை மேற்கொண்டு எடுத்து செல்வது அவர்களுடைய கடமை. 7 எதிர்கட்சிகள் கடித்ததிலும் இடம் பெற்ற விஷயமில்லையா . எனவே இது அவர்கள் மானசம்பந்தபட்ட விஷயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X