பொது செய்தி

இந்தியா

அமெரிக்க நிபந்தனை: அரசு ஏற்க முடிவு?

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி :அமெரிக்காவின், 'பைஸர்' மற்றும் 'மாடர்னா' தடுப்பூசிகளை நம் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் விவகாரத்தில், அந்நிறுவனங்களின் நிபந்தனையை ஏற்று, சட்ட பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.'வெளிநாட்டு தடுப்பூசிகளை நம் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, உள்நாட்டில் தனியாக பரிசோதனைகள் தேவையில்லை. வேறு நாட்டிலோ
 அமெரிக்கா, நிபந்தனை,பைசர்,பைஸர், மாடர்னா அரசு,

புதுடில்லி :அமெரிக்காவின், 'பைஸர்' மற்றும் 'மாடர்னா' தடுப்பூசிகளை நம் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் விவகாரத்தில், அந்நிறுவனங்களின் நிபந்தனையை ஏற்று, சட்ட பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'வெளிநாட்டு தடுப்பூசிகளை நம் நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, உள்நாட்டில் தனியாக பரிசோதனைகள் தேவையில்லை. வேறு நாட்டிலோ அல்லது உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்றிருந்தாலோ போதுமானது' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இதையடுத்து, ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை மத்திய அரசு இறக்குமதி செய்தது. மேலும், அதை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


latest tamil news


இந்நிலையில், அமெரிக்காவின் 'பைஸர், மாடர்னா' தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக, அந்நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது.'பைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளால் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட சட்ட ரீதியிலான பிரச்னைகளில் இருந்து மத்திய அரசு பாதுகாப்பு அளித்தால், தடுப்பூசி வழங்க தயார்' என, அந்நிறுவனங்கள் நிபந்தனை விதித்தன.

நம் நாட்டில், தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது. எனவே, அமெரிக்க நிறுவங்களின் நிபந்தனைகளுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பைஸர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலுமே, சட்ட ரீதியிலான பாதுகாப்பை, சம்பந்தப்பட்ட நாடுகள் அளித்துள்ளன.இது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மக்கள் நலன் சார்ந்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


அனைவருக்கும் தடுப்பூசி!



மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி நேற்று கூறியதாவது:தடுப்பூசி போடுவதில், உலக அளவில் மூன்றாவது இடத்தில் நம் நாடு உள்ளது. தடுப்பூசி இறக்குமதிக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே, தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து கொள்ளலாம். 'பைஸர், ஜான்சன் அண்ட் ஜான்சன்' உள்ளிட்ட நிறுவனங்களுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூன்-202100:14:31 IST Report Abuse
ஜான் பல அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த ஊசியை போட்டுக்கொண்டு 3-4 மாதங்கள் ஆகிறது.
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
03-ஜூன்-202122:37:56 IST Report Abuse
Tamil மருந்துக்கு பிச்சை ஆயுதம் பிச்சை அடுத்தவரிடம் வாங்கி வித்து கமிஷன் பார்க்கணும் சொந்தமா தயாரிக்க மாட்டானுங்க கடைசி வரை. சீனா போட்டியாக மக்கள் தொகையை தவிர மற்ற அனைத்திலும் 0.
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
04-ஜூன்-202106:20:49 IST Report Abuse
இரா. பாலாஎன்னமோ சொந்தமாகத் தயாரிக்கும் திறமை இருந்து அடுத்தவரிடம் பிச்சை எடுப்பதுபோல புலம்புகிறீர்கள். நம்மிடம் மனித வளம் மட்டுமே உள்ளது. தொழில் நுட்பம் இல்லை. எனவே அடுத்தவரின் தொழில் நுட்பத்தினை இரவல் வாங்கிப் பயன்படுத்துகிறோம். எவரும் பணம் மட்டும் கொடுத்தால் தொழில் நுட்பத்தினைக் கொடுத்துவிடுவதில்லை. உங்கள் துறையில் நீங்கள் புதிதாக எதையாவது கண்டுபிடித்தீர்களா? அதுபோலவே ஒவ்வொருவரும். அடுத்தவரைக் குறைகூறுதல் எளிது....
Rate this:
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
04-ஜூன்-202106:35:01 IST Report Abuse
SanDanCovaxin, Covishield, DRDO, இவையெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? உங்கள் தமி'ல'கத்தில்தான் எல்லாவற்றிலும் கமிஷன் பார்க்கும் புத்தி...
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202122:37:43 IST Report Abuse
Krishnan இந்த மூன்று மருந்துகளில் குறைந்த பக்கவிளைவுகள் தரும் மாடெர்ணாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள், பைசர் அடுத்து. அதிக பக்கவிளைவுகள் தரும் ஜான்சன் மருந்து வேண்டாம்.. சீனாவின் சிநோவக் போலவே இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியில் பக்கவிளைவுகள் மிகக்குறைவு. காரணம் அது கொல்லப்பட்ட கொரோனா வைரஸை கொண்டு உருவாக்கப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X