சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை மறந்த கோவை மக்கள்: 'டோக்கன்' வாங்க திரண்டதால் பரபரப்பு

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோவை :கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், 'டோக்கன்' பெற, ஒரே நேரத்தில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். கொரோனா தொற்று பரவி வரும் இந்நேரத்தில் அதை பற்றி துளியும் கவலைப்படாமல், கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை, சங்கனுார் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைக்கு சொந்தமாக, ரத்தினபுரியில் ஒரே வளாகத்தில் ஐந்து ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதே
கொரோனா,மறந்த ,மக்கள் ,டோக்கன்,  பரபரப்பு

கோவை :கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், 'டோக்கன்' பெற, ஒரே நேரத்தில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். கொரோனா தொற்று பரவி வரும் இந்நேரத்தில் அதை பற்றி துளியும் கவலைப்படாமல், கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, சங்கனுார் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைக்கு சொந்தமாக, ரத்தினபுரியில் ஒரே வளாகத்தில் ஐந்து ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதே பகுதியில் அலுவலகமும் இயங்குகிறது.

ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, நாளொன்றுக்கு, 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க, 'டோக்கன்' முறை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாய் மற்றும் 13 வகை மளிகை பொருட்கள்
வழங்குவதற்கான டோக்கன் வழங்குவதாக, ரத்தினபுரி பகுதியில் நேற்று தகவல் பரவியது.

உடனே அலுவலகம் முன், அப்பகுதி மக்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்தனர்.தொற்று பரவுவதை பற்றி துளியும் கவலைப்படாமல், ஒரே நேரத்தில் 1,000த்துக்கும் மேற்பட்டோர் கூடினர். டோக்கன் கேட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வரவழைக்கப்பட்டு, 'வீடு வீடாக வந்து, டோக்கன் வழங்கப்படும்; கலைந்து செல்லுங்கள்' என அறிவித்த பின்பே, திரும்பி சென்றனர்.

கூட்டுறவு துறை இணை பதிவாளர் பழனிசாமி கூறுகையில், ''2,000 ரூபாய், மளிகை பொருட்கள் வழங்குவது தொடர்பான உத்தரவு இன்னும் எங்களுக்கு வரவில்லை.''ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான டோக்கனே வழங்குகிறோம்.''ஒரே வளாகத்தில் அதிகமான கடைகள் செயல்படுகின்றன. மூன்று கடைகளை, தற்காலிகமாக பள்ளி வளாகத்துக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
04-ஜூன்-202116:07:12 IST Report Abuse
Sathish கேட்க மாட்டார்கள். பாதிப்பு இன்னும் தீவிரம் ஆகும். தற்காத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஜூன்-202120:38:21 IST Report Abuse
raghavan நைனா இந்த மாசம் 30000 அனுப்புறேன் , ஒன்றிணைவோம் கொண்டாடிக்கோ.
Rate this:
Cancel
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூன்-202115:17:57 IST Report Abuse
joy பேங்கில் பணத்தை நேரடியாக டெப்பாஸிட் செய்தால், பேங்கில் கூட்டம் அலைமோதும். தேவையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X