பொது செய்தி

தமிழ்நாடு

உயரும் பெட்ரோல் விலை: தமிழக அரசுக்கு நெருக்கடி

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை : பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவற்றின் விலை குறைப்பை உடனே செயல்படுத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப, உள்நாட்டில்,
Petrol, Fuel, CM Stalin, பெட்ரோல், தமிழக அரசு, நெருக்கடி

சென்னை : பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவற்றின் விலை குறைப்பை உடனே செயல்படுத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

தமிழக அரசுக்கு, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக வருவாய் கிடைக்கிறது. அதன்படி சராசரியாக, 1 லிட்டர் பெட்ரோல் விற்பனையால், 20 ரூபாய்; டீசல் வாயிலாக, 15 ரூபாயும் வரி வருவாய் கிடைக்கிறது.

சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.தேர்தலில், அக்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். சமீபகாலமாக, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. இன்று, லிட்டர் பெட்ரோல், 95.99 ரூபாய்க்கும்; டீசல், 90.12 ரூபாய்க்கும் விற்பனையாகின.

முழு ஊரடங்கால், வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, வாகன ஓட்டிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விரைந்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
05-ஜூன்-202115:57:17 IST Report Abuse
Kumar மத்திய அரசின் சாதனை
Rate this:
Cancel
Baskar - DHARMAPURI,இந்தியா
04-ஜூன்-202121:54:56 IST Report Abuse
Baskar Petrol vilaiyai kuraippen enru terdal vakkurudi ennacchu
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
03-ஜூன்-202121:12:10 IST Report Abuse
P.K.SELVARAJ பெட்ரோல் டீசல் விலை GST குள் கொண்டு வந்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை பகிர மத்திய அரசு தயாரா? இந்த விலை நிர்ணயம் செய்வது மாநில அரசின் கையில் இல்லை என்பது கூட தெரியாத ஒரு கூட்டம். மாநில அரசு கொரோனா பிடியில் உள்ளதை மனதில் கொள்ளாமல் திட்டும் கூட்டம். 5 வருடம் ஒன்றும் செய்யாமல் கடைசி சில மாதங்களில் எலக்சன் வருகிறது என்பதற்காக சில வேலைகள் நடை பெற்றது. ஒரு மாதம் கூட முடியவில்லை அதற்குள் விமர்சிக்கும் கூட்டம். மக்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X