பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஆங்கிலமும் அவசியம்!

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : ராகவசிம்ஹன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:2021 - 2022ம் கல்வியாண்டு முதல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட, ஏழு மொழிகளில் பொறியியல் பயிலலாம் என, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த அறிவிப்பு, கிராமப்புற மாணவர்கள் பொறியியல்
ithu, ungal idam, இது, உங்கள், இடம், ஆங்கிலம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



ராகவசிம்ஹன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

2021 - 2022ம் கல்வியாண்டு முதல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட, ஏழு மொழிகளில் பொறியியல் பயிலலாம் என, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த அறிவிப்பு, கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஊக்குவிக்கும்.பொறியியல் கல்வி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளியில் தாய்மொழியில் கல்வி பயின்ற மாணவர்கள், ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.அதையும் கடந்து, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லுாரியில் பேராசிரியர்கள், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதை கண்டு மிரண்டு விடுகின்றனர்.ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், அவர்களுக்குள் தாழ்வுமனப்பான்மை குடியேறி விடுகிறது.ஆங்கிலத்தில் பேச முயன்றாலும், தவறு ஏற்படும்போது, சக மாணவர்களால் அவமானப்படுத்தப்படுகின்றனர்.


latest tamil news


தாய்மொழியில் கல்வி கற்பது, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். திறமையான பொறியியல் வல்லுனர்கள் உருவாக்கப்படுவர்.ஆனால் தமிழில் படிப்பதால், அந்த மாணவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தான் வேலைவாய்ப்பு உண்டு. வெளிமாநிலம், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அதை பயன்படுத்த முடியாது.நம் மாணவர்கள், நிச்சயம் ஆங்கிலம் அறிந்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்ப பாடங்களை, தமிழில் மொழிபெயர்த்து படிப்பதால், கூடுதல் சிக்கல் தான் ஏற்படும்.பொறியியல் கல்லுாரியில், ஆங்கிலம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
03-ஜூன்-202122:49:18 IST Report Abuse
Tamil அரசு பள்ளியில் ஆங்கில முறையில் படிக்க பலர் விரும்பினாலும் தனியார் பள்ளி கொள்ளை அடிக்க குறைந்த அளவு இருப்பிடமே ஒதுக்க படுவதால் பலரால் பெறமுடியவில்லை. 75% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஆங்கில முறை கல்வி ஒதுக்கீடு செய்யலாம் , படிக்காத மாணவர்கள் தொழில் முறை கல்வியை கற்று கொடுக்கலாம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
03-ஜூன்-202119:54:30 IST Report Abuse
S. Narayanan தமிழ் மொழியை மட்டுமே நம்பி இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பு தான். தமிழில் நிரம்ப படித்தால் தமிழ் புலவர் ஆகலாம். பட்டி மன்றம் நடத்தலாம். அரசியலுக்கு போனால் ஓரளவு குப்பை காட்டலாம். கல்யாணம் செய்ய நினைத்தால் கிராமத்து பெண் கிடைப்பது கூட சந்தேகமே.
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
03-ஜூன்-202118:16:31 IST Report Abuse
தமிழன் என்ஜினியரிங் முடிந்த பின் பல கம்பெனிகளில் இன்டெர்வியூ வரும். அவர்களின் கிளயண்ட் அல்லது ஸ்டேக் ஹோல்டர் கண்டிப்பா தமிழனா இருக்க வாய்ப்பில்லை. ஆக இன்டர்வியூ கண்டிப்பாக இங்கிலீஷில் மட்டுமே நடக்கும். அப்பொழுது என்ன செய்வார்கள் நம் தமிழ் வழி மாணவ கண்மணிகள்? நான் பள்ளியில் முழுக்க தமிழ் வழி படித்தவனே. இன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்ற மூன்று மொழிகளை சரளமாக பேசுவேன். மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கு ஆங்கிலம் மிக மிக அவசியம் என்பதை புரிந்து கொள்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X