நதியில் விழுந்த தந்தை, சகோதரி; போராடி காப்பாற்றிய 7 வயது சிறுவன்

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புளோரிடா: நதியில் விழுந்த தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்றுவதற்காக, ஒரு மணி நேரம் போராடி நீந்திச் சென்று உதவி கிடைக்க ஏற்பாடு செய்த, 7 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீபன் பவுஸ்ட், தன், 7 வயது மகன், சேஸ் மற்றும் 4 வயது மகள் அபிகாயிலுடன், அங்குள்ள நதியில் மீன்பிடிக்க சென்றார்.திடீரென நதியின் வேகம்

புளோரிடா: நதியில் விழுந்த தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்றுவதற்காக, ஒரு மணி நேரம் போராடி நீந்திச் சென்று உதவி கிடைக்க ஏற்பாடு செய்த, 7 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.



latest tamil news


அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீபன் பவுஸ்ட், தன், 7 வயது மகன், சேஸ் மற்றும் 4 வயது மகள் அபிகாயிலுடன், அங்குள்ள நதியில் மீன்பிடிக்க சென்றார்.திடீரென நதியின் வேகம் அதிகரித்தது. அதில், படகு கவிழ்ந்து மூவரும் தண்ணீரில் தத்தளித்தனர். சிறுமி மட்டும், பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருந்தார்.தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்தில், கரையை நோக்கி, சேஸ் நீச்சலடிக்க துவங்கினார்.


latest tamil news


நதியின் அலையின் வேகத்துக்கு எதிராக செல்ல வேண்டியதால் கடுமையாக போராடினார்.ஒரு மணி நேரம் போராடி, கரையை அடைந்து, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டான். அங்கிருந்தவர்கள் தந்தையையும், மகளையும் மீட்டனர். தீரத்துடன் செயல்பட்டு, தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்ற முயற்சி எடுத்த சிறுவன் சேஸ்க்கு, சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-ஜூன்-202100:07:00 IST Report Abuse
THINAKAREN KARAMANI உண்மையில் இந்தச் சிறுவன்தான் " REAL HERO ." பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
prakash - Chennai,இந்தியா
03-ஜூன்-202110:31:01 IST Report Abuse
prakash பாராட்டுக்கள், இந்த சிறு வயதில் பெரிய வீர செயல் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
prakash - Chennai,இந்தியா
03-ஜூன்-202110:29:28 IST Report Abuse
prakash பாராட்டுக்கள் இந்த சிறு வயதில் பெரிய வீர செயல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X