தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பொருள், நிவாரணம் வாங்க முடியாமல் தவிப்பு

Added : ஜூன் 03, 2021
Share
Advertisement
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள், நலத்திட்ட உதவிகள், நிவாரணம் பெற ரேஷன் கார்டு அவசியம். அதற்கு விண்ணப்பதாரர்கள் உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in ல் விண்ணப்பிக்க வேண்டும். அதனை, வட்ட வழங்கல் அதிகாரிகள் சரிபார்த்து ரேஷன் கார்டு வழங்குவர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 1,035 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 6.50 லட்சம் பயனாளிகள் உள்ளனர். ஊரடங்கால் பாதித்துள்ள அரிசி கார்டுதாரர்களுக்கு

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள், நலத்திட்ட உதவிகள், நிவாரணம் பெற ரேஷன் கார்டு அவசியம். அதற்கு விண்ணப்பதாரர்கள் உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in ல் விண்ணப்பிக்க வேண்டும். அதனை, வட்ட வழங்கல் அதிகாரிகள் சரிபார்த்து ரேஷன் கார்டு வழங்குவர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,035 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 6.50 லட்சம் பயனாளிகள் உள்ளனர். ஊரடங்கால் பாதித்துள்ள அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.ஏற்கனவே விண்ணப்பித்து வினியோகிப்பதற்கு தயார் நிலையில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கும், அவர்களுக்கு வந்த 'குறுஞ்செய்தி' அடிப்படையில் நிவாரணம், மளிகை பொருட்கள் வழங்கலாம் என அரசு அறிவித்தது.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் புதிதாக ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் காரணமாக 2021 ஜனவரி, பிப்ரவரியில் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கல், திருத்தம் செய்தல் மேற்கொள்ளவில்லை. தேர்தல் முடிவடைந்த பின்பும், இதுவரை புதிய ரேஷன் கார்டுகளை வழங்கவில்லை.

விண்ணப்பதாரர்களின் விபரம் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இணையதளத்தில் காண்பிக்கிறது. இதனால் பல ஆயிரம் பேர் பொருள், நிவாரணம் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். உடனே, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X