பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழ் வாழ்க' பலகை தேவையா? அமைச்சர் கவனம் திரும்புமா!

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (121)
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், அகற்றப்பட்ட ‛தமிழ் வாழ்க' பலகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஒரு அவசியம் இல்லாதது மட்டும் அல்ல அவசரம் இல்லாதது.அமைச்சர்கள் இந்த மாதிரி விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட முக்கிய விஷயமான கொரோனா, வேலைவாய்ப்பு, மருத்துவமனை, மருந்து தட்டுப்பாடு, அரசுக்கு வருமானம் போன்ற விஷயத்தில் கவனம்
ribbon building, Tamil, Tamil name plate

சென்னை : சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், அகற்றப்பட்ட ‛தமிழ் வாழ்க' பலகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இது இப்போது ஒரு அவசியம் இல்லாதது மட்டும் அல்ல அவசரம் இல்லாதது.அமைச்சர்கள் இந்த மாதிரி விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட முக்கிய விஷயமான கொரோனா, வேலைவாய்ப்பு, மருத்துவமனை, மருந்து தட்டுப்பாடு, அரசுக்கு வருமானம் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
தமிழகத்தில், கடந்த, 2006 - 11ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியின்போது, அரசு அலுவலகங்களில், தமிழ் வாழ்க' பலகை அமைக்கப்பட்டது. அதன்பின், ஆட்சி மாற்றத்தின்போது, பெரும்பாலான அலுவலகங்களில், தமிழ் வாழ்க பொறித்த பலகை அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையிலும் அகற்றப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ரிப்பன் மாளிகைக்கு, கொரோனா தடுப்பு பணிக்காக சமீபத்தில் சென்றார். அப்போது, தமிழ் வாழ்க பலகையை, ரிப்பன் மாளிகையில் மீண்டும் அமைக்க அறிவுறுத்தினார்.அதனடிப்படையில், ரிப்பன் மாளிகையில், தமிழ் வாழ்க பலகை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
08-ஜூன்-202119:32:23 IST Report Abuse
SENTHIL பலகையிலாவது தமிழ் வாழ்ந்து விட்டு போகட்டுமே...அவர்கள் ஆசையை ஏன் கேடுக்குறீர்கள்... இவர்களால் இதுதான் முடியும். சன் ஷைன் பள்ளியில் தமிழ் வாழ்கிறதா இல்லை ஹிந்தி ஆங்கிலம் வாழ்கிறதா எனறால் நம்மை அடிக்க வருவார்கள்...
Rate this:
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,கத்தார்
06-ஜூன்-202117:33:51 IST Report Abuse
Ramshanmugam Iyappan வரவேற்கத்தக்க முடிவு
Rate this:
Cancel
Thiagharajan Lambotharan - chennai,இந்தியா
06-ஜூன்-202113:39:14 IST Report Abuse
Thiagharajan Lambotharan ஏன் ஊசி போட காசில்லை ன்னு சொல்லிட்டு இருபதாயிரம் கோடி செலவு பண்ணி கட்டடம் கட்டினா அது அத்தியாவசியம். காலணா செலவுல ஒரு போர்டு வச்சா அது உங்களுக்கு அனாவசியம். உங்க பிரச்னை தமிழ் வாழ்க ன்னு சொல்றதுதானே. இந்தி வாழ்க, சமஸ்கிருதம் வாழ்க ன்னா உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்ல. அப்படித்தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X