அதிகரிக்கும் குழந்தை திருமணம்; உடனடி நடவடிக்கை தேவை: கமல்

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை : 'கொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: எந்த ஒரு பேரிடர் காலத்திலும், இளம் சிறார்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்வர். குறிப்பாக, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, கல்வி இடைநிற்றல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாவர்.கடந்தாண்டு ஊரடங்கு தொடங்கிய
Kamal, Kamal Haasan, Child Marriage

சென்னை : 'கொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: எந்த ஒரு பேரிடர் காலத்திலும், இளம் சிறார்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்வர். குறிப்பாக, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, கல்வி இடைநிற்றல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாவர்.கடந்தாண்டு ஊரடங்கு தொடங்கிய போதே 1.30 கோடி குழந்தை திருமணம் நடக்கும் என, 'யுனிசெப்' எச்சரித்திருந்தது.


latest tamil news


தற்போது தமிழகத்தில், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதாக சி.ஆர்.ஓய்., என்ற தன்னார்வல அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020 மே மாதம் மட்டும் சேலத்தில் 98; தர்மபுரியில் 192 என, தமிழகத்தில் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

கடந்தாண்டை விட இது அதிகம்.உறுதியான தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறினால், இந்தாண்டும் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும். தமிழக அரசு, இவ்விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
04-ஜூன்-202122:32:15 IST Report Abuse
bal அது எப்படி தெரியும் இவருக்கு...பங்கு கிடைக்கவில்லையா.
Rate this:
Cancel
03-ஜூன்-202122:10:57 IST Report Abuse
theruvasagan ஒலக நாயகனுக்கு தமிழிலே பிடிக்காத வார்த்தை திருமணம்தான். இஷ்டப்பட்ட போது இஷ்டப்பட்டவங்களோட லிவிங் டுகெதர். அலுத்துப்போனா லீவிங் ஈச் அதர். அதுதான் கண்ணியமான பாலிசி. சொரியார்சிஸ்ட் சித்தாந்தமும் கூட.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
03-ஜூன்-202121:00:40 IST Report Abuse
sankaseshan திருமணத்தை பற்றிப்பேச இவனுக்கு. என்ன தகுதி. ? திருமணம் செய்து. கொள்ளாமல் 10. வருஷம். குடும்பம் நடத்தியவன். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X