சோனியா அலமாறியில் இருக்கும் சர்ச்சை புத்தகங்கள் உண்மையா?

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (69) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகைப்படம் ஒன்றில் அவரின் பின்புறம் உள்ள அலமாறியில் உள்ள புத்தகங்களில் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வந்த நிலையில், அது மார்பிங் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.இணையத்தில் உண்மையை விட போலிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகைப்படமும்
Sonia, MorphedImage, Viral, SocialMedia, FactCheck, சோனியா, காங்கிரஸ், மார்பிங், புகைப்படம்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகைப்படம் ஒன்றில் அவரின் பின்புறம் உள்ள அலமாறியில் உள்ள புத்தகங்களில் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வந்த நிலையில், அது மார்பிங் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இணையத்தில் உண்மையை விட போலிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகைப்படமும் சிக்கியுள்ளது. சோனியாவின் புகைப்படம் ஒன்றில், அவரது பின்புறம் உள்ள அலமாறியில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் திடீரென சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஏனெனில், அந்த அலமாறியில், ‛இந்தியாவை எப்படி கிறிஸ்துவ நாடாக மாற்றுவது' என்னும் புத்தகமும், பைபிள் மற்றும் ஏசு சிலையும் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.


latest tamil news


‛இந்தியாவின் நலம் விரும்பியாக கருதப்படும் சோனியா எப்படிப்பட்டவர் என்பது புரிகிறதா,' என்பது போன்ற கருத்துகளுடன் பலரும் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக பி.டி.ஐ வெளியிட்டுள்ள சோனியா குறித்த செய்தியில் இதன் உண்மையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்த புத்தகமோ, பைபிளோ, ஏசு சிலையோ இடம்பெறவில்லை. எனவே, விஷமிகள் சிலரால் இது சித்தரிக்கப்பட்டதாக உண்மையான புகைப்படத்தை காங்கிரசார் வெளியிட்டுள்ளனர்.

ஒரு செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் போலிகளை பகிர்வதால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இது போன்ற செயல்களை தவிர்க்குமாறும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
08-ஜூன்-202110:43:27 IST Report Abuse
sahayadhas இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி என்ற புத்தக தலைபே சரியில்ல. அவ்வாறு என்றாலும் அது 1860 கால கட்டத்தில் நடந்துள்ளதே. தெரிந்தும் அவர்களிடம் ஒன்றிய அரசு இந்த நிமிஷம் வரை கையேந்துகிறதே. இதில் புத்தகம் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
06-ஜூன்-202117:11:43 IST Report Abuse
சோணகிரி இங்கே தமிழ்நாட்டிலும் சிலர் நெற்றியில் இந்துமத சின்னங்களை அணிந்துகொண்டு மதமாற்றி கிஸ்தவ மதத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்...
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
06-ஜூன்-202117:05:23 IST Report Abuse
சோணகிரி கிறிஸ்துவ நாடாக மாற்றுவது பற்றிய புத்தகம் அலமாரியில் இல்லாமல் இருக்கலாம்... ஆனால்... இத்தாலிய குடும்பத்தின் ரத்தத்திலும் புத்தியிலும் அந்த சிந்தனைதான் உள்ளது என்பதையும் ஹிந்துக்கள் அனைவரும் அறிவோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X