பிரதமர் மோடியால் வெற்றி!| Dinamalar

பிரதமர் மோடியால் வெற்றி!

Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (2)
Share
பிரதமர் மோடியால் வெற்றி!நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; ஆக்சிஜன் தேவையும் குறைகிறது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம். அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,தரவுகளை வெளியிடுங்கள்!இதர நாடுகளை போல், கொரோனா தடுப்பூசியின்

பிரதமர் மோடியால் வெற்றி!

நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; ஆக்சிஜன் தேவையும் குறைகிறது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம்.

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

தரவுகளை வெளியிடுங்கள்!

இதர நாடுகளை போல், கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தரவுகளை, பொதுமக்களிடம் மத்திய அரசு வெளியிட வேண்டும். வெளிப்படை தன்மையுடன் அந்த தகவல்களை வெளியிட்டால், நாட்டு மக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவர்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

ஒரு நாள் இரவில் மாறாது!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பல ஆண்டுகளாக அவநம்பிக்கை உள்ளது. எனவே இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் சூழல், ஒரே நாள் இரவில் மாறிவிடாது. எல்லையில் பாக்., அத்துமீறி நடத்தும் தாக்குதல்களை நிறுத்தும் வரை, இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை உருவாகாது.

எம்.எம்.நரவானே

இந்திய ராணுவ தலைமை தளபதி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X