ஒலிம்பிக்ஸ் போட்டிகள்: பிரதமர் ஆய்வு

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜூலையில் துவங்கவுள்ள, 'ஒலிம்பிக்ஸ்' போட்டிகளில் பங்கேற்கும் நம் வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடிஇன்று (ஜூன்.3) ஆய்வு செய்தார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், ஜூலை 23ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் துவங்குகின்றன. இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவுள்ள நம் விளையாட்டு வீரர்களை தேர்வு
ஒலிம்பிக்ஸ் போட்டிகள்: பிரதமர் ஆய்வு

புதுடில்லி : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜூலையில் துவங்கவுள்ள, 'ஒலிம்பிக்ஸ்' போட்டிகளில் பங்கேற்கும் நம் வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடிஇன்று (ஜூன்.3) ஆய்வு செய்தார்.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், ஜூலை 23ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் துவங்குகின்றன. இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவுள்ள நம் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.


latest tamil news





இதுவரை, 11 விளையாட்டு பிரிவுகளில், 100 வீரர்கள் வரை தேர்வாகி உள்ளனர். மேலும், 25 வீரர்கள் தேர்வு செய்யும் பணி, விரைவில் முடிவடைய உள்ளன.

இந்நிலையில், வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன்.3) ஆய்வு செய்தார். ஒலிம்பிக்சில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு, கொரோனா தொற்று நேரத்திலும், தடையில்லா பயிற்சி வழங்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது குறித்தும், பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.

''டோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன், ஜூலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாடி, 135 கோடி மக்கள் சார்பில் அவர்களை ஊக்கப்படுத்த உள்ளேன்,'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaimani - chennai,இந்தியா
04-ஜூன்-202109:38:41 IST Report Abuse
unmaimani மோடி எந்த நேரமும் உழைக்கும் ஒரு மனிதர். நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர். கதறுங்க கதறுங்க மோடி எதிர்ப்பாளர்கலே. அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர்தான் வெல்வார்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜூன்-202107:19:55 IST Report Abuse
அறவோன் வில்லேஜ் விஞ்ஞானி ஒலிம்பிக் விஞ்ஞானியானது "டோக்கியோ புராணம்"
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜூன்-202107:13:39 IST Report Abuse
அறவோன் விளங்கிவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X