முதல்வருக்கு பன்னீர்செல்வம்., நன்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு பன்னீர்செல்வம்., நன்றி

Added : ஜூன் 03, 2021
Share
சென்னை:ஓய்வு பெற்றபோக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., நன்றிதெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, ஓய்வூதிய பலன்களை வழங்க, அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

சென்னை:ஓய்வு பெற்றபோக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., நன்றிதெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, ஓய்வூதிய பலன்களை வழங்க, அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. தேர்தல் முடிந்த நிலையில், அவற்றை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என, மே 31ல் அறிக்கை வழியாக, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

அதை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை, நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி.இவ்வாறு ஓ.பி.எஸ்.,தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X