அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி விழிப்புணர்வு பழனிசாமி., அறிவுரை

Added : ஜூன் 03, 2021
Share
Advertisement
ஆத்துார்:கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்மற்றும் கட்சியினருக்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி., அறிவுறுத்தினார்.சேலத்தில் இருந்து, ஆத்துார் வழியாக, சென்னை சென்ற எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.,க்கு, நத்தக்கரை சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:கொரோனா பரவலை தடுக்க, மக்கள் தடுப்பூசி

ஆத்துார்:கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்மற்றும் கட்சியினருக்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி., அறிவுறுத்தினார்.

சேலத்தில் இருந்து, ஆத்துார் வழியாக, சென்னை சென்ற எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.,க்கு, நத்தக்கரை சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:கொரோனா பரவலை தடுக்க, மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி, ஆலோசனை வழங்க வேண்டும்.

கொரோனாவில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, மத்திய - மாநில அரசின் உதவிகளை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'கொரோனாவில் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழில், கொரோனா பாதிப்பு எனக் குறிப்பிடாமல் வழங்குவதால், அரசின் உதவித்தொகை, நலத்திட்டங்களை பெறுவதில் சிரமம் உள்ளது' என்றனர்.அதற்கு இ.பி.எஸ்., ''அரசிடம் இப்பிரச்னையை எடுத்துரைத்து, விரைவாக தீர்வு காணப்படும்,'' என, உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X