பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீசாருக்கு ஊக்கத் தொகை ரூ.5,000

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை :கொரோனா தொற்று காலத்தில், களப் பணியாற்றி வரும் தமிழக போலீசாருக்கு, தலா, 5,௦௦௦ ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, கருணாநிதி பிறந்த நாளான நேற்று, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அரசின் தாராள நடவடிக்கைகளாக, பல நலத் திட்டங்களையும் அதிரடியாக அறிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷனில் 14 இலவச பொருட்கள் வழங்கும் திட்டமும் துவக்கப்பட்டது.
தமிழக போலீசார், ஊக்கத் தொகை,   ரூ.5,000

சென்னை :கொரோனா தொற்று காலத்தில், களப் பணியாற்றி வரும் தமிழக போலீசாருக்கு, தலா, 5,௦௦௦ ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, கருணாநிதி பிறந்த நாளான நேற்று, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அரசின் தாராள நடவடிக்கைகளாக, பல நலத் திட்டங்களையும் அதிரடியாக அறிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷனில் 14 இலவச பொருட்கள் வழங்கும் திட்டமும் துவக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது, தமிழக போலீசார் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.அவர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தமிழ்நாடு போலீஸ் துறையில் பணியாற்றி வரும், இரண்டாம் நிலை காவலர் முதல், ஆய்வாளர் வரையிலான, ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 184 பேருக்கு, தலா, 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


98 வது பிறந்த நாள்மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின், ௯8வது பிறந்த நாளை ஒட்டி, நேற்று இத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், முதல்வர் வழங்கினார். கொரோனா தொற்றால் இறந்த, முன்களப் பணியாளர்களான பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், போலீசார் குடும்பங்களுக்கு, நிவாரண உதவித்தொகை வழங்கினார்.கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கொரோனாவால் இறந்த, கள்ளக்குறிச்சி மாவட்டம், 'சன் நியூஸ்' தொலைக்காட்சி செய்தியாளர் கணேசமூர்த்தி.


10 லட்சம் ரூபாய்மதுரை மாவட்டம், 'நமது முரசு' நாளிதழ் செய்தியாளர் நம்பிராஜன்; தேனி மாவட்டம், 'தினமணி' செய்தியாளர் சரவணகுமார் ஆகியோரின் குடும்பத்தினரிடம், தலா, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.அதேபோல, கொரோனா தொற்றால் இறந்த முன்களப் பணியாளர்களான, டாக்டர்கள் சந்திரசேகரன், ரவீந்திரன்; மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ்; சென்னை, தமிழ்நாடு அதிதீவிர பயிற்சிப் பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோனத்தான். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய ஏட்டு சதீஷ்குமார் ஆகியோர் குடும்பத்துக்கு, தலா, 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.


அர்ச்சகர்களுக்கு...ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு, நிவாரண உதவித்தொகை, ௪,௦௦௦ ரூபாய், 10 கிலோ அரிசி மற்றும், 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் மாத சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.அவர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்க, உத்தரவிடப்பட்டது.

அதன்படி, கோவில் பணியாளர்களுக்கு, உதவித்தொகை, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.திருமுல்லைவாயில், பிடாரி எட்டியம்மன் கோவில், பிடாரி பொன்னியம்மன் கோவில்; சென்னை, பூங்காநகர், கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில், அத்திப்பட்டு கிருஷ்ணசாமி பெருமாள் கோவில், சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில், பைராகிமடம் திருவேங்கட முடையார் வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகியவற்றில் பணியாற்றும், 12 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு, ஊக்கத்தொகை, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.ரேஷனில், அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய்; அத்தியாவசிய, 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும், நேற்று துவக்கி வைக்கப்பட்டது.தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் அறிக்கையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கருணாநிதி பிறந்த நாளான, ஜூன், 3 முதல், 4,000 ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தி.மு.க., ஆட்சி அமைத்ததும், கொரோனா நிவாரணத் தொகை, முதல் தவணையாக, 2,000 ரூபாய், 2.09 கோடி ரேஷன் அரிசி கார்டுதார்களுக்கு, மே மாதம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதம், 4,196.38 கோடி ரூபாய் செலவில், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.அத்துடன், அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு, 844.51 கோடி ரூபாய் செலவில், அத்தியாவசிய, 14 மளிகை பொருட்கள் அடங்கிய, மளிகை தொகுப்பு வழங்கும் திட்டமும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெரியசாமி, சக்கரபாணி, தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி, செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலர் முகமது நசிமுதீன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.latest tamil news

6 புதிய திட்டங்கள் அறிவிப்புதமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சிக்கு வந்து, முதல் முறையாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆறு புதிய திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் விபரம்:

* கருணாநிதி நினைவை போற்றும் வகையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்
.

* கிட்டத்தட்ட, ௨ லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் 'கலைஞர் நினைவு நுாலகம்' அமைக்கப்படும்
.


latest tamil news

இலக்கிய மாமணி :
* தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு, ஆண்டுதோறும் 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும். விருதாளர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

* ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்படும்.


விவசாயிகளுக்கு:திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் கலெக்டரால் ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் 24.30 கோடி ரூபாய் மதிப்பில், 16 ஆயிரம் டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.திருவாரூர் மாவட்டத்தில் 5 கோடி ரூபாயில் 10 வட்டாரங்களில், சூரிய ஔியில் உலர்விக்கும் 50 களங்கள் அமைக்கப்படும்.கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு மறு சுழற்சி தொகுப்பு உலர்விப்பான்கள்; நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு தொடர் ஓட்ட உலர்விப்பான்கள் என, மொத்தம் 6.20 கோடி ரூபாயில் 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.


latest tamil news

திருநங்கையருக்கு சலுகை :நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தைப் போல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு நகர்ப்புற அரசு பஸ்களில் இலவச பயண சலுகை வழங்கப்படும். ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதும் இந்த ஆணை நடைமுறைக்கு வரும்.இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
04-ஜூன்-202121:39:26 IST Report Abuse
KumariKrishnan Bjp தமிழக சினிமாக்களில் வரும் மகா வில்லத்தனமான கதாப்பாத்திரங்கள் மக்களுக்கு ஏதாவது உதவுவதாக காட்சிகள் வரும் அதனாலேயே அந்த வில்லனை அவர்கள் போலீசிடம் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் அந்த போலீசுக்கும் அவன் நிறைய செய்வான் திமுகவை பொறுத்தமட்டில் அவர்கள் காவல் துறையினருக்கு எப்போதுமே நிறைய செய்வார்கள், ஆசிரியர்களுக்கும் அரசு உத்தியோகத்தவர்களுக்கும் நிறைய செய்வார்கள் காரணம் தேர்தல் நேரத்தில் அதுவும் உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியர்கள் திமுகவுக்கு உதவுவார்கள் ஆசிரியர்கள் சமுதாய வளர்ச்சியை யோசிக்க மாட்டார்கள் தனது சம்பள உயர்வை மட்டுமே பார்ப்பார்கள் போலீஸ் அரசு அலுவலர்கள் இவர்களெல்லாம் குற்றம் செய்யும் ஆட்சியாளர்களின் காப்பாளர்கள் திமுக அரசு செய்யும் செயல்கள் யாவையுமே மீனுக்கு தூண்டிலில் உணவு கோர்க்கும் செயலே
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூன்-202118:53:48 IST Report Abuse
rajan .அவாளோட பழக்க வழக்கங்களை வெச்சு எவ்வளவு சினிமா படங்கள் தயாரித்து காசு சம்பாதித்து உள்ளனர். தசாவதாரம், கௌரவம், வியட்நாம் வீடு, அன்னியன், அவ்வை சண்முகி, இன்னும் எவ்வளவோ நூற்றுக்கணக்கான வெற்றி படங்களை கொடுத்து காசு பார்த்துள்ளார்கள். ஆனா அவளை எப்போவும் மட்டம் தட்டி பேசிக்கொண்டு சந்தோஷம் அடைகிறது சின்ன புத்தி உடைய அற்ப கூட்டம்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
04-ஜூன்-202118:12:03 IST Report Abuse
sahayadhas பட்டா எண் 1021 ( 743.)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X