பொது செய்தி

தமிழ்நாடு

" கெஞ்சி கேட்கிறேன் " முதல்வரே ! இது உங்கள் இடம்

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (197)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :கிருஷ்ணவேணி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:என் கணவர், தினக்கூலி வேலை பார்த்து வருகிறார். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக, நாம் எவ்வளவோ பாதிக்கப்பட்டுள்ளோம். வேலை, வருமானம் இல்லாமல், அன்றாடம் வாழ்வை கடந்து போவதே மிக சிரமமாக உள்ளது.என்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :




latest tamil news


கிருஷ்ணவேணி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
என் கணவர், தினக்கூலி வேலை பார்த்து வருகிறார். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக, நாம் எவ்வளவோ பாதிக்கப்பட்டுள்ளோம். வேலை, வருமானம் இல்லாமல், அன்றாடம் வாழ்வை கடந்து போவதே மிக சிரமமாக உள்ளது.என் கணவருக்கு தினமும் 300 ரூபாய் சம்பளம் கிடைக்கும். சம்பளம் வாங்கி வரும் வழியிலேயே, 'டாஸ்மாக்' கடையில் ஒரு சரக்கு பாட்டிலை வாங்கி குடித்த பின் தான் வீட்டிற்கு வருவார். மீதி, 125 ரூபாய் தான் குடும்ப செலவுக்கு கிடைக்கும்.

இதில் பால், அரிசி, பருப்பு, காய்கறி வாங்க, 100 ரூபாய் செலவு ஆகும். மறுநாள் என் கணவர் வேலைக்கு போக, பஸ்சுக்கு 25 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். ஆக மொத்தம் கையில் இருப்பது, வெறும் பூஜ்யம் தான்.இதற்கிடையில் குழந்தைக்கு சுகமில்லை என்றால், ஒரு மாத்திரை கூட வாங்க முடியாது.அவர், ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும், குடும்பமே பசியில் தான் கிடக்கணும். என் கணவர், ஒரு 'குடி' அடிமை. தற்போது, 20 நாட்களாக டாஸ்மாக் இல்லாமல், அவர் மதுவை மறந்து இருக்கிறார்.


latest tamil news



தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்காமல் இருந்தால், 'குடி'க்கு அடிமையானோர், அதில் இருந்து மீண்டு விடுவர்.ஒரு ஏழை குடும்ப பெண்ணாக இருந்து, முதல்வர் ஸ்டாலினை கெஞ்சி கேட்கிறேன். டாஸ்மாக்கை மூடுங்கள். என் கணவரின் சம்பளம் முழுமையாக குடும்பத்திற்கு கிடைத்தால், எங்கள் வாழ்க்கை நல்லாயிருக்கும். நாங்கள் மனதார வாழ்த்தினால், உங்கள் குடும்பமும் நல்லாயிருக்கும்.'குடி'யை ஒழித்து, குடிசைக்கு ஒளி ஏற்றுங்கள் முதல்வரே.

Advertisement




வாசகர் கருத்து (197)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
05-ஜூன்-202102:25:46 IST Report Abuse
periasamy இந்த கிருஷ்ணவேணி பத்து வருஷம் எங்கே இருந்தார் அந்த செத்து போன ஏ ஒன்னு குற்றவாளியிடம் இவர் ஏன் இது போன்ற வேண்டுதல் விடுக்கவில்லை
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
05-ஜூன்-202101:48:53 IST Report Abuse
BASKAR TETCHANA அம்மா உங்கள் கணவர் குடிகாரர் என்றால் அதில் உங்கள் தவறும் அடங்கி உள்ளது. சொல்லி பாருங்கள் கேட்க வில்லை என்றால் மிரட்டி பாருங்கள் அதுவும் முடியவில்லை என்றால் போலீசில் சொல்லுங்கள். அதற்க்கு தானே மகளிர் காவல் நிலையம் உள்ளது. போயும் போயும் சாராய தொழில் அதிபரிடம் உங்கள் குறைகளை சொல்லுகிறீர்கள் .இதெல்லாம் நடக்கிற காரியமா. அப்புறம் அவர்கள் ஆலை எப்படி நடக்கும் அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள் அவர்களது பெண்டாட்டி பிள்ளைகள் சாப்பாற்றிக்கு கஷ்ட்ட படாதா. முடிந்த கடவுளிடம் பொய் சொல்லுங்கள். இந்த ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியாது முதல்வருக்கும் ஒன்றும் புரியாது. மக்கள் எப்படி போனால் எங்களுக்கு என்ன என்று இருப்பவர்கள் இந்த ஆட்சியாளர்கள். வேண்டுமானால் ஒரு யோசனை சொல்லுகிறேன் கேளுங்கள் உதயநிதிக்கு தொலைபேசியில் சொன்னால் போதும் அடுத்த பத்து நிமிடங்களில் உங்கள் பிரச்னை தீர்ந்து விடும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஜூன்-202101:33:43 IST Report Abuse
தமிழவேல் மனதைத் தொடும் கடிதம்... ஆனால், நடக்காத காரியம். அவரை திருத்த முயன்று பார்ப்பதே நல்லது. அதே சமயத்தில் மிரட்டலோ, ப்லேக்மெயிலோ செய்யாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X