பொது செய்தி

இந்தியா

அதிகாரிகள் ஓய்வு; அரசு 'கிடுக்கி'

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு துறைகளின் செயலர்களுக்கும், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு கமிஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், குறிப்பிட்ட காலம் வரை, வேறு எந்த பணியிலும் சேரக் கூடாது என்ற விதி உள்ளது. இதை மதிக்காமல் சிலர், ஓய்வு பெற்ற உடனேயே, தனியார் நிறுவனங்களில் முழு
retirement, restriction, rule, ஓய்வு, விதி,

புதுடில்லி: மத்திய அரசு துறைகளின் செயலர்களுக்கும், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு கமிஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், குறிப்பிட்ட காலம் வரை, வேறு எந்த பணியிலும் சேரக் கூடாது என்ற விதி உள்ளது. இதை மதிக்காமல் சிலர், ஓய்வு பெற்ற உடனேயே, தனியார் நிறுவனங்களில் முழு நேர ஊழியராகவோ, பகுதி நேர ஊழியராகவோ பணியில் சேர்கின்றனர்; இதை தடுக்க வேண்டும்.


latest tamil news


ஓய்வு பெற்ற பின், குறிப்பிட்ட காலத்துக்கு எந்த பணியிலும் ஊழியர்கள், அதிகாரிகள் சேரக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்க வேண்டும். ஓய்வு பெற்றோர், உடனடியாக வேறு பணியில் சேரவில்லை என்பதை, சம்பந்தப்பட்ட துறைகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜூன்-202111:32:13 IST Report Abuse
Pugazh V இதுக்கு தலபுராணம் ஏன் பதில் சொல்ல வேண்டும்? மோடி அரசின் கையாலாகாத்தனம். சிவிசி கண்டு பிடித்து அறிவுரை வழங்கியிருக்கிறது. நிர்வாக புளி, ஆட்சியில் வெங்காயம் என்று பீற்றிக் கொள்ளும் மோடி அரசு மற்றும் அமைச்சர்கள் அல்லவா இதற்கு பதில் சொல்ல வேண்டும்??? நீங்கள் வேண்டுமானால்... "அந்த அதிகாரிகள் காங்கிரஸ் காரர்கள்" என்று மொக்கையாக ஒரு கருத்து போடுங்களேன். வெ.ச. மணி. ...ஆமாம்... உங்களின் vena suba ஐடியை ஊத்தி மூடிட்டீங்களா? அதாவது உங்களின் 14 ஐடி களில் ஒண்ணு குளோஸ்டா? நல்லது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
04-ஜூன்-202111:28:30 IST Report Abuse
M  Ramachandran மம்தா இதற்கல்லமாம் பயப்பட மாட்டார் .ஜூஜூபீ . பணம் பென்ஷனை விட பலமடங்க்கு வாரிவழஙகுவார். அதற்க்கு வருமானவரி அதற்கும் டிமிக்கி கொடுப்பார். பிறகு என்ன அந்த அதிகாரி தஞ்சாவூர் தலையாட்டி யாக இருந்தால் போதும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-ஜூன்-202110:01:11 IST Report Abuse
Girija ஆமாம் ஆனால் பதவி நீட்டிப்பு பெறலாம், கவர்னர் , ராஜ்ய சபா எம்பி , அரசு ஆலோசகர் ஆகலாம் ............... சிவசங்கரா சிவசங்கரா சவுக்கியமா ................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X