துவங்கிய ஒரு மாதத்தில் டிரம்ப் வலைதளம் மூடல்

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்-அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ஒரு மாதத்திற்கு முன் துவக்கிய வலைதளத்தை திடீரென மூடி விட்டார். அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.இந்நிறுவனங்கள் ஒருதலைப்பட்சமாக செய்திகளை பகிர்வதாக குற்றஞ்சாட்டினார். இந்த சமூக வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின்

வாஷிங்டன்-அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ஒரு மாதத்திற்கு முன் துவக்கிய வலைதளத்தை திடீரென மூடி விட்டார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.



latest tamil news


இந்நிறுவனங்கள் ஒருதலைப்பட்சமாக செய்திகளை பகிர்வதாக குற்றஞ்சாட்டினார். இந்த சமூக வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர். அதிபர் தேர்தலின் தோல்விக்குப் பின், இந்தாண்டு ஏப்ரலில், அமெரிக்க பார்லி.,யில், டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட, ஐந்து பேர் பலியாயினர். இந்த கலவரத்திற்கு டிரம்பின் வன்முறையை துாண்டும் பேச்சு தான் காரணம் என, தெரியவந்தது.


latest tamil news


இதையடுத்து பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களும், டிரம்பின் கணக்கை முடக்கி விட்டன. இதனால் ஒரு மாதத்திற்கு முன் டிரம்ப், தன் வலைதளத்தில் 'பிளாக்' எனும் பக்கத்தை துவக்கி, அதில் கருத்துகளை தெரிவித்து வந்தார். தற்போது இந்த வலைதளப் பிரிவையும் அவர் மூடி விட்டார்.

இதற்கு, டிரம்ப் ஆதரவாளர்களின் பதிவுகளை சமாளிக்கும் அளவிற்கு வலிமையாக, கணினியின் 'சர்வர்' இல்லை என காரணம் கூறப்படுகிறது. வரும் 2024ல் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப், விரைவில் வேறு ஒரு வலைதளத்தில் இணைந்து கருத்துகளை தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
04-ஜூன்-202112:26:39 IST Report Abuse
Velumani K. Sundaram ட்விட்டரும் பேஸ்புக்கும் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பின் கணக்கை மூடியதால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன. டிரம்ப் மீண்டும் துறப்பாரா என ஏங்குகிறார்கள்...
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜூன்-202107:29:32 IST Report Abuse
அறவோன் This old man too is a "நிரந்தர மூடி"
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஜூன்-202109:22:21 IST Report Abuse
 Muruga Velகலைஞர் மாதிரி தான் விதம் விதமா மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார் ..வாழ்கிறார் .....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜூன்-202106:04:24 IST Report Abuse
வெகுளி இப்படித்தான் கருணாநிதி டுவிட்டர் கணக்கு ஆரம்பித்தார்... ஹிஹி.... அப்புறம் ஹிஹி.... ஹய்யோ ஹய்யோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X