பொது செய்தி

இந்தியா

முகேஷ் அம்பானியின் சம்பளத்தை 'பூஜ்ஜியம்' ஆக்கிய கொரோனா

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்திலிருந்து, ஊதியமாக எந்த தொகையையும் பெற்றுக் கொள்ளவில்லை.வணிகங்களையும், பொருளாதாரத்தையும் கொரோனா மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியதை அடுத்து, அவரே முன்வந்து, தனக்கு ஊதியம் எதுவும் வேண்டாம் என அறிவித்துவிட்டார். கடந்த
Mukesh Ambani, Salary, zero, Reliance, businessman

புதுடில்லி: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்திலிருந்து, ஊதியமாக எந்த தொகையையும் பெற்றுக் கொள்ளவில்லை.

வணிகங்களையும், பொருளாதாரத்தையும் கொரோனா மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியதை அடுத்து, அவரே முன்வந்து, தனக்கு ஊதியம் எதுவும் வேண்டாம் என அறிவித்துவிட்டார். கடந்த நிதியாண்டுக்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், முகேஷ் அம்பானிக்கான ஊதியம் எனும் பகுதியில், 'பூஜ்ஜியம்' எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


latest tamil news


இதற்கு முந்தைய நிதியாண்டில், முகேஷ் அம்பானி ஊதிய மாக, 15 கோடி ரூபாயை பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, தொடர்ந்து 11 ஆண்டுகளாகவே அவர் இதே தொகையை தான் ஊதியமாக பெற்று வந்துள்ளார். ஊதியத்தை அதிகரித்து கொள்ளவில்லை. கடந்த நிதியாண்டில், அம்பானியின் மனைவியான நிடா அம்பானி, நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டணமாக, 8 லட்சம் ரூபாயும்; ஆண்டு கமிஷன் தொகையாக, 1.65 கோடி ரூபாயும் பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
05-ஜூன்-202106:23:16 IST Report Abuse
g.s,rajan யாராக இருந்தால் என்ன ,எல்லாரும் ஒரு நாள் ரோட்டுக்கு வந்துதான் ஆகணும் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-ஜூன்-202106:12:32 IST Report Abuse
g.s,rajan ஆமா மூணுவேளையும் அம்பானிக்கு குடிக்க கஞ்சியாவது கிடைக்குமா ??பொது மக்களுக்கு அதுதான் ரொம்ப ரொம்பக் கவலையாக இருக்கு .அம்பானியே நடுத் தெருவுக்கு வந்துட்டாரா???ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு ,சாமானிய மக்கள்தான் இந்தியாவுல நடுத்த தெருவுக்கு வந்துட்டதா நினைச்சோம் ஆனா அம்பானியே பிச்சைக்கார கும்பல்ல சேர்ந்துட்டாரே ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜூன்-202121:11:01 IST Report Abuse
g.s,rajan இந்தியாவை அம்பானி அதானிக்கு பெரும்பாலும் வித்தப்புறமும் அம்பானி பிச்சைக்காரர் ஆகிட்டாரா ,இது ஒன்னும் நம்பும்படி இல்லை , ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X