தி.மு.க., எப்போதும் கோயில்களுக்கு எதிரானது: பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (132)
Advertisement
நாகர்கோவில்: ''தி.மு.க., எப்போதுமே கோயில்களுக்கு எதிரானது. ஹிந்து கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் கூறினார்.தீ விபத்தில் சேதம் அடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை பார்வையிட்ட பின் மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கோயில்களை சரிவர பராமரிக்க மாட்டார்கள். ஆனால் கோயில் வருமானத்தை கொண்டு வேறு செலவு
திமுக, பாஜக, முருகன்

நாகர்கோவில்: ''தி.மு.க., எப்போதுமே கோயில்களுக்கு எதிரானது. ஹிந்து கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் கூறினார்.

தீ விபத்தில் சேதம் அடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை பார்வையிட்ட பின் மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கோயில்களை சரிவர பராமரிக்க மாட்டார்கள். ஆனால் கோயில் வருமானத்தை கொண்டு வேறு செலவு செய்வார்கள். இனி அரசு இப்படி செய்யாது என்று நம்புகிறேன். அறநிலையத்துறை ஹிந்து கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். கோயில் நிர்வாகத்தை பக்தர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.


latest tamil news


மண்டைக்காடு கோயிலில் தீவிபத்து ஏற்படும் வரை அலட்சியமாக இருந்த அதிகாரிகள், பூஜாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள பாரம்பரிய முறைப்படி செயல்படும் இந்த கோயிலை பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்க வேண்டும். மேற்கூரை எரிந்த நிலையில் தங்க தகடுகளால் ஆன மேற்கூரை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (132)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar g -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூன்-202109:16:00 IST Report Abuse
kumar g பி ஜே பி மனிதத்துக்கு எதிரானது..மனித மாண்புற்கு நேர் எதிரானது.. இந்தியாவிற்கு கேடானது
Rate this:
Cancel
Manithan -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூன்-202107:29:55 IST Report Abuse
Manithan These guys dont have anything else useful to offer for the improvement of ppl .. just keep bringing temple and religion.. they can go to middle East....
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
04-ஜூன்-202118:35:59 IST Report Abuse
சோணகிரி தீயமுகவில் இருக்கும் ஹிந்து உணர்வற்ற மானமற்ற கொத்தடிமைகளுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறப்போவதில்லை... தன்னுடைய சொந்த மதத்தை இழிவுபடுத்துவதை வேறு எந்த மதத்தினரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்... ஆனால்.. தீயமுகவில் இருக்கும் கொத்தடிமைகள் தாங்களும் சேர்ந்து தங்கள் சொந்த இந்துமதத்தை இழிவுபடுத்துவார்கள்...
Rate this:
Mayon - Kajang,மலேஷியா
05-ஜூன்-202107:57:30 IST Report Abuse
Mayonநம் ஹிந்து மதத்தில் இழிவு படுத்தும் சங்கதிகள் இல்லையென்றால், எந்த கொம்பனாலும் ஹிந்து மதத்தை இழிவு படுத்த இயலாது. ஹிந்து மதத்தில் ஏதோ பல இழிவுகள் உள்ளது என்பதை, நம்ம பாஜக முருகனே விரும்பி தெரிவிக்க முயல்கிரார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X