ரேஷன் கடைகளுக்கான பருப்பு கொள்முதலில் முந்தைய, அ.தி.மு.க., அரசு பல கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது. பருப்பு விலையை, கிலோ 146.50 ரூபாய்க்கு அதிகரித்து வாங்கிய நிலையில், இப்போதைய தி.மு.க., 87 ரூபாய்க்கு தான் வாங்குகிறது.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்
'ஊழல், ஊழல் என சொல்லிக் கொண்டிருப்பதை விட, தமிழக காங்., வழக்கு தொடர வேண்டியது தானே; ஏன் சும்மா இருக்கிறது..' என, கேட்க தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.
அனைத்து மாநிலங்களிலும் மாநில வெறி ஊட்டப்படுகிறது. தேசத்தின் மீதான நம்பிக்கை, தேசப்பற்று கிண்டலடிக்க கூடியதாக உள்ளது; இந்த நிலையை மாற்ற வேண்டும்.
- ஏகத்துவ பிரசார ஜமாத் என்ற அமைப்பின் தலைவரான சையது இப்ராகிம்
'மாநிலங்களை துண்டாடினால், தேசியத்தை வீழ்த்தினால், காலாகாலத்திற்கும் குடும்ப ஆட்சி நடத்தலாம் என்ற எண்ணமாக இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஏகத்துவ பிரசார ஜமாத் என்ற அமைப்பின் தலைவரான சையது இப்ராகிம் பேட்டி.
தமிழகத்தில் மெத்த படித்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எல்லாம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் என்கிறார். எனக்கு தெரிந்து, 'தமிழக அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ், கேரள அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ்' என்று அதிகாரிகள் கிடையாது. எல்லா மாநிலங்களிலும், ஐ.ஏ.எஸ்., தான்!
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
'அவர் அமெரிக்காவில் படித்தவர்; அங்கு அப்படி தான் இருக்குமோ... அதை சொல்லி இருப்பாரோ...' என, கேட்க துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.
தடுப்பூசி இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் கையிருப்பு உள்ளதென, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற வேண்டியது, மாநில அரசின் கடமை.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி

'கேட்டு பெற்றால், அடிமை அரசாகி விடும் அல்லவா; அதனால் தானோ என்னவோ கேட்காமலே இருக்கின்றனர்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி.
'தொற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறுகிறார்; இதைத் தானே, மத்திய அரசும் செய்கிறது. அதை ஏன் குறை கூறுகிறீர்கள்?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
'அவங்க செய்தால் தப்பில்லை; ஒன்றிய அரசு, சாரி... மத்திய அரசு செய்தால் தப்பு...' என, கிண்டலடிக்க தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
இசையமைப்பாளர் இளையராஜா வருகையால், ஹிந்தி இசை ஒழிந்தது; தமிழிசை உலக இசையானது. அவரின் பிறந்த நாளில், ஹிந்தியை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்!
- வி.சி., கட்சி பிரமுகர் வன்னி அரசு
'இன்னொரு மொழியை இப்படி பகிரங்கமாக சாடலாமா; இப்படியே ஹிந்தி பேசும் மக்களும் ஆரம்பித்தால் நாடு நன்றாக இருக்குமா...' என, கண்டிக்க தோன்றும் வகையில், வி.சி., கட்சி பிரமுகர் வன்னி அரசு அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE