பொது செய்தி

இந்தியா

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (4.6.2021 - 10.6.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சந்திரன், புதன், குரு சாதக நிலையில் உள்ளனர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.அசுவினி: வருங்கால நன்மைக்காக முதலீடுகள் செய்வீர்கள். நல்ல திருப்பம் ஏற்படும். சிறு சலசலப்பு வரலாம். பணியாளர்களுக்குத் தடுமாற்றம் வரும்.
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (4.6.2021 - 10.6.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சந்திரன், புதன், குரு சாதக நிலையில் உள்ளனர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
அசுவினி: வருங்கால நன்மைக்காக முதலீடுகள் செய்வீர்கள். நல்ல திருப்பம் ஏற்படும். சிறு சலசலப்பு வரலாம். பணியாளர்களுக்குத் தடுமாற்றம் வரும். பெண்களுக்கு வெற்றி உறுதி. கவலை குறைந்து நிம்மதி வரும்.
பரணி: குடும்பத்தில் நிம்மதி மீளும். வலியவர்கள் உதவி செய்வார்கள். பணியாளர்கள் வெற்றி காண்பீர்கள். புதிய துறையில் ஈடுபடுவதானால் ஆலோசனை பெறுங்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சிஅதிகரிக்கும்.
கார்த்திகை 1: தைரியமும் உறுதியும் வளர்ச்சிக்கு வழிகாட்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்கள் உயர்வு அடைவர். பணியாளர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவுகளில் இருந்தமனக்கசப்புகள் மாறும்.


ரிஷபம்

செவ்வாய், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.


latest tamil news


கார்த்திகை 2,3,4: பணியாளர்கள் நினைத்ததைச் சாதிக்க முடியும். மனம் நிறைவு அடையும். குடும்பத்தில் சுபவிஷயம் ஒன்று முடிவாகும். முன்னேற்றத்தில் சிறு தொல்லைகள் இருக்கும். குழந்தைகளால்மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி: பணியாளர்கள் இயந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. நன்மையும் மற்றதும் கலந்து வரும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பணம் கைக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

மிருகசீரிடம் 1,2: உங்களின் முயற்சிக்கு சிறு உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. எதிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராதவை நிகழும்.செலவுகளால் சிரமம் ஏற்படும்.


மிதுனம்


ராகு, கேது, சந்திரன் நன்மைகளை வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

மிருகசீரிடம் 3,4: உங்களின் முயற்சியால் உறவினர்களுடன் இருந்த பிரச்னை நீங்கும். பழைய தவறுகளுக்கு வருந்தி அதை சரிசெய்வீர்கள். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.சேமிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

திருவாதிரை: எதிர்பாலினத்தினரால் மகிழ்ச்சி, நன்மை உண்டு. யாரிடமும் முறைப்பாக நடந்து கொள்ள வேண்டாம். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். நண்பர்கள் நடந்து கொள்ளும்முறையால் உங்களின் சிரமம் தீரும்.

புனர்பூசம் 1,2,3: எதையும் சிந்தித்துச் செய்வீர்கள். நேரவிரயம் குறைந்து விரும்பிய விஷயங்கள் துரிதமாகும். நற்செய்தி வரும். தேவையற்ற வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.பணியாளர்கள் பணிந்து போவது நல்லது.


கடகம்


சூரியன், புதன், ராகு அனுகூல பலனை தருவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

புனர்பூசம் 4: மறக்க முடியாத சந்தோஷ சம்பவம் நடைபெறும். புதிதாக அரசியல் ஈடுபாடு வரும். திடீர் செலவுகளால் ஏற்பட்டிருந்த திகைப்பு மறையும். முன்பு இருந்த வருத்தங்கள் தீரும். நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

பூசம்: உங்களுக்கு அதிர்ஷ்டத்தை விட உழைப்பு அதிகம் உதவும். ஆன்மிக சிந்தனை அமைதி தரும். புதிய வருமானம் வரும். பேச்சினால் பிரச்னை வராமல் கவனமாக இருங்கள். தன்மையாகப் பணி விஷயங்களில் வெற்றி காண்பீர்கள்.

ஆயில்யம்: கடந்த நாட்களின் சருமப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணையிடம் இருந்த பிரச்னை தீரும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு பூச்சிக்கடி ஏற்படலாம். பணத்தின்அருமையை உணர்ந்து கொள்வீர்கள்.


சிம்மம்



குரு, புதன், சூரியன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.

மகம்: முகராசியால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். ரகசியங்களைக் காக்க வேண்டும். கவனமான செயல்பாடு காரணமாக முயற்சிகள் நிறைவேறும். எதிலும் தடை, தாமதம் இருந்தாலும் இறுதி வெற்றிஉங்களுக்கே.

பூரம்: பணிச்சுமையை மிகுந்த திறமையுடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். உங்களின் பலவீனத்தை உணர்ந்து கொள்வீர்கள். சகோதரர் மூலம் உதவி கிடைக்கும். புதிய ஆபரணம்வாங்குவீர்கள்.

உத்திரம் 1: திருமணம் சம்பந்தமான விஷயங்கள் நல்லபடியாக நிறைவேறும். முன்னேற்றத்திற்கான சில யுக்திகளைக் கற்க வேண்டி வரும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள். உங்களின்முயற்சி வெற்றி பெறும்.

சந்திராஷ்டமம்: 4.6.2021 காலை 6:00 - 5.6.2021 நள்ளிரவு 2:35 மணி


கன்னி


கேது, புதன், சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

உத்திரம் 2,3,4: வெற்றி பெறுவதற்கு தேவையான பொறுமையை கற்பீர்கள். விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். வசீகரப் பேச்சால் பிறரை கவர்வீர்கள். பங்குச் சந்தையில் முதலீடுசெய்வீர்கள்.

அஸ்தம்: உங்களின் உழைப்பால் நண்பர்களுக்கு நன்மை செய்வீர்கள். புதிய உத்வேகம் உருவாகி செயல்பாடுகளில் முன்னேறுவீர்கள். வாழ்க்கைத்துணைக்கு பதவி, சம்பளம் உயரும். சாமர்த்தியம்காரணமாக வெற்றியை எட்டுவீர்கள்.

சித்திரை 1,2: பேச்சைக் குறைத்து திறமையை அதிகரித்து வெற்றி பெறுவீர்கள். கடந்த நாட்களை விட இப்போது கூடுதல் நன்மை வரும். தாயாருக்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும்.

சந்திராஷ்டமம்: 5.6.2021 நள்ளிரவு 2:36 - 8.6.2021 மதியம் 2:02 மணி


துலாம்


குரு, புதன் கூடுதல் நற்பலன்களை தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சித்திரை 3,4: பிள்ளைகளுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். நிம்மதி ஏற்படும். ஒரு இடைவெளிக்குப் பிறகு உறவினர் ஒருவர் நன்மை செய்வார். குடும்பத்தில் தேவையான செலவுகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

சுவாதி: எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

விசாகம் 1,2,3: எண்ணியது நிறைவேறும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுக்கு சாதகமாக செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 8.6.2021 மதியம் 2:03 மணி - 10.6.2021 நாள் முழுவதும்


விருச்சிகம்


சனி, சந்திரன், குரு நல்ல பலனைத் தருவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

விசாகம் 4: பணியாளர்களுக்குப் பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. வாகனத்தை சரிசெய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்குக் கனவு நனவாகும். வாழ்வில்முன்னேற புதிய வாய்ப்பு கிடைக்கும்.

அனுஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். அரசியலில் இருந்து வந்த உள்பகை நீங்கும். வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். உங்கள் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வியாபாரத்தில்பங்குதாரர்கள் உதவி செய்வார்கள்.

கேட்டை: பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடங்களை தீர்த்து வைப்பீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினருடன் இருந்த மனஸ்தாபம் உங்களின் முயற்சியால் நீங்கும். எதிர்காலவாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும்.


தனுசு


புதன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.

மூலம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். ஆடம்பரசெலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். மேலதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்குப்பேச்சில் கவனம் தேவை.

பூராடம்: பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் பெறுவீர்கள்.

உத்திராடம் 1: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால முன்னேற்றம் பற்றி அதிரடியானதிட்டங்கள் தீட்டுவீர்கள்.


மகரம்


சுக்கிரன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

உத்திராடம் 2,3,4: தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒற்றுமையால் வீடு களைகட்டும். நண்பரின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் காண்பீர்கள்.மாணவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.

திருவோணம்: பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். எதிர்பாலினத்தினரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மனதைரியம் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: உறவினர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடும். அலுவலகவிஷயமாக புது முடிவுகள் எடுப்பீர்கள்.


கும்பம்


புதன், சூரியன், செவ்வாயால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சரபேஸ்வரர் வழிபாடு வளம் தரும்.

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி ஓரளவு லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மாணவர்களுக்கு மேல்படிப்பு பற்றியஒருவித தெளிவு கிடைக்கும்.

சதயம்: வியாபாரிகள் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். மாணவர்களுக்கு நிம்மதியான வாரம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பாக்கிகளை பேசியே வசூலிப்பீர்கள். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள்.

பூரட்டாதி 1,2,3: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்வீர்கள். அநாவசியப் பொருட்களை வாங்கத் தோன்றும். பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு நற்செய்தி வரும். நட்பு வட்டம் விரிவடையும்.


மீனம்


குரு, புதன், சனி அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். ராகவேந்திரர் வழிபாடு சிரமம் நீக்கும்.

பூரட்டாதி 4: திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் முயற்சியை அதிகரிப்பீர்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் சகபணியாளர்கள் உங்களுக்குசாதகமாக இருப்பார்கள்.

உத்திரட்டாதி: பணம் வந்தாலும் போதவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்த நண்பர்கள் இழுத்தடிப்பார்கள். வாழ்க்கைத்துணையுடன் விட்டு கொடுத்து செல்வீர்கள். உடல்நலம் மேம்படும்.

ரேவதி: தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகளை வாங்குவீர்கள். முயற்சிகள் சிறிதளவு வெற்றியை தரும். பணிச்சுமை அதிகமாகும். மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X