இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை வீழ்த்த கைகோர்த்த 8 எதிர்க்கட்சிகள்

Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஜெருசலேம்: இஸ்ரேலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருக்கும் நெதன்யாகுவை பதவியில் இருந்து அகற்றி புதிய அரசு அமைக்க எட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.மேற்காசியாவை சேர்ந்த இஸ்ரேலில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.எனினும் பெரும்பான்மை பலம் இல்லாததால்
Israel, Benjamin Netanyahu, Naftali Bennett, PM, இஸ்ரேல், பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு, நப்டாலி பென்னட்

ஜெருசலேம்: இஸ்ரேலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருக்கும் நெதன்யாகுவை பதவியில் இருந்து அகற்றி புதிய அரசு அமைக்க எட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

மேற்காசியாவை சேர்ந்த இஸ்ரேலில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.எனினும் பெரும்பான்மை பலம் இல்லாததால் நீடிக்க முடியவில்லை. அதனால் காபந்து பிரதமராக நெதன்யாகு நீடித்து வந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ருவன் ரிவ்லின் எதிர்க்கட்சியான யேஷ் அதிட் கட்சி தலைவர் யயிர் லாபிட்டுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் அளித்தார். இதற்கான கெடு முடிய அரை மணி நேரம் இருக்கையில் யேஷ் அதிட் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர அவசரமாக ஜனாதிபதி ருவன் ரிவ்லினை சந்தித்தார். அப்போது தன்னை ஆதரிக்கும் எட்டு கட்சிகளின் எம்.பி.க்கள் பட்டியலை அளித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார். அதை ஏற்றுக் கொண்ட ருவன் ரிவ்லின் பார்லி.யில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இதையடுத்து யேஷ் அதிட் பார்லி. சபாநாயகரை சந்தித்து சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil news


புதிய கூட்டணி அரசின் சார்பில் ராணுவ முன்னாள் அமைச்சரும் யமினா கட்சி தலைவருமான நப்டாலி பென்னட் இஸ்ரேல் பிரதமராக பொறுபேற்கிறார். அவர் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை யேஷ் அதிட் உடன் பகிர்ந்து கொள்வார். அதுவரை யேஷ் அதிட் வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகிப்பார்.

கடந்த 2009 முதல் இஸ்ரேல் பிரதமராக உள்ள நெதன்யாகுவை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் மீண்டும் தேர்தல் நடப்பதை தடுக்கவும் மாறுபட்ட கொள்கைகளை உடைய எட்டு எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதில் நெதன்யாகுவுக்கு ஆதரவளித்து வந்த அரபுக் கட்சியும் சேர்ந்துஉள்ளது புதிய அரசுக்கு கூடுதல் பலத்தை தந்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
04-ஜூன்-202115:54:29 IST Report Abuse
ganesha புரியாத பேசாதீர்கள். வரபோற ஆள் ஜெருசேலத்தை இன்னுமே கதறவிடுவான்
Rate this:
Cancel
Siva - Chennai,இந்தியா
04-ஜூன்-202115:53:46 IST Report Abuse
Siva புதிதாக பதவி ஏற்க இருக்கும் பென்னட், நெதன்யாஹூவின் கட்சியில் இருந்தவர் தான். நெதன்யாகு பாலஸ்தீன விஷயத்தில் மென்மையாக இருக்கிறார் என கூறி, பென்னட் கட்சியில் இருந்து வெளியேறி, புது கட்சி துவங்கியவர். பென்னட், நெதன்யாகுவை விட டெரர் ஆசாமி.  நெதன்யாகு மோடி என்றால்,  இந்த பென்னட் யோகி.  
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
05-ஜூன்-202112:45:07 IST Report Abuse
பெரிய ராசு அருமை...
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-ஜூன்-202115:18:42 IST Report Abuse
Indian  Ravichandran பரமன் கருத்து சூப்பர் அதுவே என் கருத்தும், தீய சக்திகள் இப்போது மிக அதிகமாக ஆட்டம் பிடித்து ஆடும் சனியின் பார்வை திரும்புகிற வரைக்கும் இது தொடரும் அப்புறம் ஆப்புதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X