சென்னை: காலூன்ற முடியாத இடங்களில் பயங்கரவாதம் என சித்தரிப்பதாக பா.ஜ., மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினா்.
சென்னையில், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்து பேசினர்.
இதன் பின்னர், சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். 7 பேர் விடுதலையில் உறுதியாக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். முதல்வரின் செயல்பாடு சரியாக உள்ளது. கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்படுகிறார்.

காலூன்ற முடியாத இடங்களில் பயங்கரவாதம் என முத்திரை குத்த பா.ஜ., முயல்கிறது. எங்களது போராட்டம் பயங்கரவாதம், தீவிரவாதம் இல்லை. இன விடுதலைக்கான போராட்டம் சிங்கள பயங்கரவாதத்தை கண்டிக்காத நாடு, சிங்கள மீனவர்களை கண்டிக்காத நாடு, எங்களை பயங்கரவாதிகள் என கூறி சதி செய்கிறது. குற்றம், குறை சொல்பவர்களை கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டும். சிறிது நாட்களுக்கு தேர்வு நடத்த வேண்டாம். மாணவர்களின் நலன், ஆரோக்கியம் கருதி தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE