புதுடில்லி: புது டில்லியில் கோவிட் 3வது அலை உருவாகும் அபாயம் இருக்கும் சூழ்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று இரு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

நாட்டின் தலைநகர் டில்லியில் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால், கோவிட் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், கோவிட் தொற்றின் 3வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கோவிட் 3வது அலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக, உயர்நிலைக் குழுவையும், நிபுணர்கள் குழுவையும் டில்லி அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், கோவிட் 3வது அலைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று காலை 11:00 மணிக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் துவங்கியுள்ளது. பிற்பகல் 3:00 மணியளவில் கோவிட் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாக, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE