தவித்த வாய்க்கு மலிவு விலையில் தண்ணீர் தரும் முன்னாள் பாங்க் மேனேஜர்

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சுத்தமான ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை பத்தில் இருந்து பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்க முடியாத ஏழை எளிய மக்களுக்காக அதே சுத்தமான தண்ணீரை ஒரு லிட்டர் மூன்று ரூபாய்க்கு விற்று வருகிறார் ஒருவர்.இவர் இந்த தொழிலை செய்வதற்கு முன்பாக பாங்க ஒன்றில் உதவி மேலாளராக இருந்தார் என்பது இன்னும் விசேஷம்.பல ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அந்த வேலையை விட்டுவிட்டு நுாறும்latest tamil newsசுத்தமான ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை பத்தில் இருந்து பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்க முடியாத ஏழை எளிய மக்களுக்காக அதே சுத்தமான தண்ணீரை ஒரு லிட்டர் மூன்று ரூபாய்க்கு விற்று வருகிறார் ஒருவர்.
இவர் இந்த தொழிலை செய்வதற்கு முன்பாக பாங்க ஒன்றில் உதவி மேலாளராக இருந்தார் என்பது இன்னும் விசேஷம்.
பல ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அந்த வேலையை விட்டுவிட்டு நுாறும் இருநுாறும் கிடைக்கும் இந்த வேலைக்கு இவர் ஏன் வந்தார் என்றுதானே கேட்கிறீர்கள் அதே கேள்வியைத்தான் நானும் இவரிடம் கேட்டேன்


latest tamil news


அவரின் பதில் இதோ
என் பெயர் பாலச்சந்திரன் (வயது 40) இந்த ஏரியாவில் பாலா என்றால் பலருக்கும் தெரியும் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை ராயப்பேட்டை ஏரியாவில்தான்.
இருபது வருடங்களுக்கு முன் படித்து முடித்ததும் பாங்கில் வேலை கிடைத்தது அங்கு படிப்படியாக முன்னேறி பதினைந்து வருடங்களில் பாங்க்கின் உதவி மேலாளரானேன்.
திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது பெயர் சாய் ரித்திகா.
எல்லாம் சந்தோஷமாகவே சென்றது ஒரே சிரமம் எனது வீட்டிற்கும் வேலை பார்க்கும் இடத்திற்கும் வெகு துாரம். வீட்டை வேலை பார்க்கும் இடத்திற்கு மாற்ற முடியாத சூழ்நிலை வேலையையும் வீட்டுப்பக்கம் மாற்றிக் கொண்டு வர இயலவில்லை.
குடும்பத்தை, குறிப்பாக குழந்தையை நானும் என்னை குழந்தையும் ரொம்பவே மிஸ் செய்வதாக உணர்ந்தோம்.குடும்பமா? வேலையா? என்ற குழப்பத்தில் குடும்பமே என முடிவு செய்து நாற்பாதாயிரம் ரூபாய் சம்பளம் தந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
சேமிப்பு இருப்பு என்று எல்லா பணத்தையும் போட்டு சொந்தமாக தொழில் துவங்கி நான் நாலு பேருக்கு வேலை கொடுத்தேன் தொழிலில் பெருத்த நஷ்டம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் தனி மரமானேன்.
ஆனாலும் நம்பிக்கையை கைவிடவில்லை ஏதாவது வழி கிடைக்கும் என்றிருந்த சூழ்நிலையில் என் மாமா ஒருவர் கேன் தண்ணீரை வாங்கி பாட்டிலில் நிரப்பி விற்றுக் கொண்டு இருந்தார்.
இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கும் கேனை பரித்து லிட்டர் லிட்டராக விற்றால் அறுபது ரூபாய்க்கு விற்கலாம்.பத்தில் இருந்து பதினைந்து ரூபாய் கொடுத்து கம்பெனி பாட்டில் தண்ணீர் வாங்க முடியாதவர்கள் இந்த தண்ணீரை வாங்கிக் கொள்வார்கள், அவர்களுக்கும் லாபம் நமக்கும் லாபம் என்றார்.
திருடாமல் பொய் சொல்லாமல் எந்த தொழில் செய்தால் என்ன என்று முடிவு எடுத்து இந்த தொழிலை செய்வது என்று முடிவு செய்தேன்.
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பின் வாசல் பக்கம் உள்ள அம்மா உணவகத்திற்கு எதிரே உள்ள பாலத்தின் கீழ் நாலைந்து கேன்களுடன் தொழிலை துவங்கி இப்போது ஆறு வருடமாகிறது
மக்கள் காலி ஒரு லிட்டர் பாட்டிலைக் கொடுத்து அதில் கேன் வாட்டரை நிரப்பிக் கொண்டு மூன்று ரூபாய் கொடுப்பர்.
ஆஸ்பத்திரியில்,அம்மா உணவகத்தில் எல்லாம் நிலத்தடி நீர்தான் என்பதால் என்னிடம் தண்ணீர் வாங்கிக் கொள்வர் கம்பெனி பாட்டில் தண்ணீர் வேண்டும் என்பவர்கள் அதையும் வாங்கிக் கொள்வர்.
இப்படி அம்மா உணவகம் வருபவர்கள்,ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள் மட்டுமின்றி ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்கள் பலரும் என்னிடம் தண்ணீர் வாங்கிக் கொள்வர்.இதன் மூலம் ஒரு நாளைக்கு ஐநுாறு ரூபாய் வரை வருமானம் கிடைத்தது.
இப்போது கொரோனா காலம் என்பதால் ஆட்டோ மட்டும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டதால் பழைய வருமானம் இல்லை பாதிதான் கிடைக்கிறது அதிலும் மூன்று ரூபாய் இல்லை என்பாரும்உண்டு அந்த மூன்று ரூபாயை கடன் சொல்வாரும் உண்டு பராவாயில்லை கொரோனா காலத்தில் நம்மால் முடிந்த சேவையாக இருக்கட்டும் என்று அதை கண்டு கொள்வது இல்லை.
எப்படி இருந்தாலும் நான் இப்போது குடும்பத்தோடு நிம்மதியாக திருப்தியாக சந்தோஷமாக இருக்கிறேன் அது போதும் என்று சொல்லும் பாலசந்திரனிடம் பேசுவதற்கான எண்;91767 93999.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
12-ஜூன்-202115:55:25 IST Report Abuse
Nallappan Kannan Nallappan நல்லது கடவுள் அருள்புரியட்டும் வாழ்க
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
04-ஜூன்-202115:25:01 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN ஆந்திரா திருப்பதி சுற்றி உள்ள கோயில்களுக்கு அருகில் (சுற்றுலா ஸ்தலங்கள்) உள்ள கடைகளில் இது போன்று 5 ரூபாய்க்கு தருகிறார்கள். ஆனால் அவர்கள் படத்தில் உள்ளது போல் கையில் பிடித்து கொடுப்பது இல்லை. மாறாக பாட்டிலை ஒரு கருவியின் ( Dispenser) மீது கமுத்தி வைத்துள்ளனர். நாமே பிடித்து கொள்ளலாம் 5 ரூபாய் கொடுத்து. சுகாதாரமுமாக உள்ளது. நண்பர் அது போல முயற்சித்தால் இன்னும் தொழிலில் முன்னேறலாம். வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X