தடுப்பூசி சான்றிதழ்கள் இருந்தால் தான் திருமணத்திற்கு அனுமதி: ம.பி.,யில் பரபரப்பு

Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி சான்றிதழ் சமர்பித்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.மத்திய பிரதேசத்தில் கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் ஊரடங்க விதிகளில் சில தளர்வுகள்
MP, CovidVaccination, Certificate, Waraseoni, SDM, Mandates, Get Married, Withdraws Order, மத்திய பிரதேசம், கோவிட், கொரோனா, தடுப்பூசி, சான்றிதழ், கட்டாயம்

போபால்: மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி சான்றிதழ் சமர்பித்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் ஊரடங்க விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டன. கடந்த வாரம் வரை, ம.பி.,யில் உள்ள சில மாவட்டங்களில் ரகசியமாக திருமணங்கள் நடைபெற்றது. இதனை தடுக்க ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு திருமண சான்றிதழ்கள் வழங்கப்படாது என உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், திருமணம் நடைபெறுவதில் சிக்கல் நீங்கியது.


latest tamil news



ஆனால், அங்குள்ள பலகாட் நகரின் வாரசோனி பகுதியில் மாஜிஸ்திரேட் சந்தீப் சிங், புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, அப்பகுதியில் திருமணத்திற்கு அனுமதி கோரும் மணமக்கள் கட்டாயம் ஐந்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதில், மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகியோர் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களை அவசியம் சமர்பிக்க வேண்டும் என்பதும் அடங்கும். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
04-ஜூன்-202120:30:34 IST Report Abuse
Ramesh Sargam வரும் நாட்களில், ஜாதக பொருத்தம் கூட பார்க்க மாட்டார்கள். அட ஒரு சிலர் வரதட்ஷனை கூட வேண்டாம் என்று கூற வாய்ப்புள்ளது. ஆனால், தடுப்பூசி போட்டுகொண்டுள்ளீர்களா, கோவிட் negative சான்றிதழ் உள்ளதா என்று கேட்பார்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூன்-202116:16:34 IST Report Abuse
S. Narayanan வெரி குட்
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-ஜூன்-202115:19:57 IST Report Abuse
Indian  Ravichandran நல்ல முயற்சி தவறு இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X