கோவாக்சின் விற்பனை: சிக்கலில் காங்., அரசு

Updated : ஜூன் 04, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
புதுடில்லி: பஞ்சாபில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு, ரூ.400க்கு கொள்முதல் செய்த கோவாக்சின் தடுப்பூசியை அதிக விலைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்ததாக, அங்கு முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம், பா.ஜ., ஆகியவை குற்றம்சாட்டி உள்ளன.கோவிட்டிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் பல
Punjab, Congress, Decision, Covaxin, Hospitals, பஞ்சாப், காங்கிரஸ், கோவாக்சின், தனியார் மருத்துவமனை, சுக்பிர் சிங் பாதல், பிரகாஷ் ஜவடேகர்,

புதுடில்லி: பஞ்சாபில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு, ரூ.400க்கு கொள்முதல் செய்த கோவாக்சின் தடுப்பூசியை அதிக விலைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்ததாக, அங்கு முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம், பா.ஜ., ஆகியவை குற்றம்சாட்டி உள்ளன.

கோவிட்டிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக மத்திய அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், மொகாலியில் நிருபர்களை சந்தித்த சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பிர் பாதல் கூறுகையில், கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோஸ் ரூ.400 என கொள்முதல் செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,060க்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.660 லாபம் கிடைக்கிறது. இவ்வாறு மாநில அரசு, ஒரு நாளைக்கு 35 ஆயிரம் டோஸ் தடுப்பூசியை விற்பனை செய்து ரூ.2 கோடி வருமானம் பார்த்து உள்ளது. தனியார் மருத்துவமனைகள், ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.1,560 வசூல் செய்கின்றன. இதனால், ஒரு குடும்பத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசி போட ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் செலவாகிறது. காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கை முறையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து, உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார்.


latest tamil news


தேசிய தடுப்பூசி திட்டத்தை குறைகூறிய ராகுலை கண்டித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது,‛‛ ராகுல் மற்றவர்களுக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, அவரது கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தை கவனிக்க வேண்டும். பஞ்சாப் அரசுக்கு ஒரு டோஸ் 400 வீதம் 1.40 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அந்த மருந்தினை 20 தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்துள்ளது'' என தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறும்போது, மத்திய அரசு, மாநில அரசுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும்போது, தனி நபர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த ஏன் ரூ.3,120 செலுத்த வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் அரசு தவறான தகவலை பரப்புகிறது எனக்கூறினார்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிஎஸ் சித்து கூறுகையில், தடுப்பூசி குறித்த கட்டுப்பாடு தன்னிடம் இல்லை. சிகிச்சை, ஆய்வு , கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் ஆகியவற்றை மட்டுமே நான் கவனித்து வருகிறேன். தடுப்பூசி விற்பனை குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
05-ஜூன்-202107:09:05 IST Report Abuse
rajan பஞ்சாப் அரசுக்கு ஒரு டோஸ் 400 வீதம் 1.40 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகிறார் மத்திய அரசு, மாநில அரசுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும்போது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகிறார் ஒரே நேரத்தில் இரண்டு மத்திய அமைச்சர்கள் இரண்டு செய்திகள் சொல்கிறார்கள். இதுதான் பிஜேபியின் இரட்டை நாக்கு தன்மையை உறுதிப்படுத்துகிறது
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-ஜூன்-202106:41:43 IST Report Abuse
Darmavan CC க்கும் மேல் க்கும் வித்தியாசம் தெரியவில்லை.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05-ஜூன்-202106:29:12 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே தனியார் மருத்துவமனை என்று பொத்தாம் பொதவாக சொல்லிட்டா? அது நம்ம அண்டை நாடான தீவிரவாத நாட்டிற்க்கு கேரளாவில் இருந்து கடத்தப்படும் செய்தி இன்னமும் வரவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X