பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலையத் துறை ஆவணங்கள் 'டிஜிட்டல்' முறையில் பாதுகாப்பு

Updated : ஜூன் 06, 2021 | Added : ஜூன் 04, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை :அறநிலையத் துறை ஆவணங்களை, 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.ஹிந்து சமய அறநிலையத் துறையில், பல்வேறு நலத்திட்டங்கள், சீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதில், இத்துறையின் பழமையான ஆவணங்கள், கோப்புகளை, 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்கும் திட்டமும் ஒன்றாகும். அவசியம் அதன்படி, சென்னை,
 அறநிலைய  துறை ஆவணங்கள்,டிஜிட்டல், பாதுகாப்பு

சென்னை :அறநிலையத் துறை ஆவணங்களை, 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.ஹிந்து சமய அறநிலையத் துறையில், பல்வேறு நலத்திட்டங்கள், சீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதில், இத்துறையின் பழமையான ஆவணங்கள், கோப்புகளை, 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்கும் திட்டமும் ஒன்றாகும்.


அவசியம்அதன்படி, சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகளை, 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்கும் திட்டத்தை, துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.
அறநிலையத் துறை கோவில்களின் நிர்வாகங்கள், திருப்பணிகள்,நிலங்கள் குத்தகை உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு, அரசு, கமிஷனர் அளவில், உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
அவற்றுக்கான கோப்புகள், பதிவறையில் பாதுகாத்து வரப்படுகின்றன. இதில், நீண்ட கால கோப்புகளை, 'டிஜிட்டல்' முறையில், படி எடுத்து பாதுகாப்பது அவசியமானது.


விரிவுபடுத்தப்படும்இத்திட்டத்தின் கீழ், நிலையான கோப்புகள் உள்ளிட்ட அனைத்தும், 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்கும் பணிகள், நேற்று துவங்கின.இதன் வாயிலாக, பழமையான கோப்புகளை, காலப்போக்கில் சிதிலமடையாமல் காக்க முடியும். மேலும், சார்நிலை அலுவலகங்களில் உள்ள நீண்ட கால கோப்புகளை பாதுகாக்க, படிப்படியாக இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
துவக்க நிகழ்ச்சியில், அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் ரமணசரஸ்வதி பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
05-ஜூன்-202122:50:56 IST Report Abuse
Veeramani Shankar On 3rd chief secretary announced tamil nadu Aranilayathurai will distribute cash assistance to the eligible person. I don't understand what's the meaning of Aranilayathurai I. E. These guys removed Hindu Aranilayathurai . That means all religious places comes under TN Government. Please clarify me
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
05-ஜூன்-202121:52:02 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy தயவு செய்து சீர்திருத்தம் என்று அறநிலையத் துறை என்று போடாதீர்கள் கண்டிப்பாக இந்து சமய அறநிலையத் துறை.
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
05-ஜூன்-202118:00:07 IST Report Abuse
A P 1967ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில், அனைத்து இந்து கோயில்களுக்கும் எவ்வளவு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எவ்வளவு இருந்தன, அவைகளின் அன்றைய மதிப்பு என்ன, இன்றைய மதிப்பு என்ன ?. அதற்குப் பின் இன்றுவரை, சேர்ந்த புதிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு ? அவைகளின் இன்றைய மதிப்பு என்ன ? அதனை கோயில்களுக்கு தானமாகக் கொடுத்தவர்கள் யார், யார் ? 1967க்குப் பின் இன்றைய வரையில், குத்தகைக்கு விட்ட சொத்துக்கள் எவ்வளவு ? அதன் தற்போதைய மதிப்பு என்ன ? குத்தகைத்தொகை வரவேண்டிய பாக்கி எவ்வளவு ? பாக்கி வைத்துள்ளவர்கள் யார், யார் அவர்களது பெயர் மற்றும் முகவரி என்ன ? பாக்கி வசூலிக்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்னென்ன ? வசூலான தொகைகள் அந்தந்த கோயில்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப் பட்ட தேதி ? ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு வங்கிக் கணக்குகள் உள்ளன ? அவைகளில் எவ்வளவு பணம் உள்ளது ? வங்கிக் கணக்கை வரவு செலவு செய்ய அதிகாரம் உள்ளவர்கள் யார், யார் ? இன்றைய தேதியில் ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு அசையும், மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன ? கோயில் பணியில் இந்துக்கள் அல்லாதோர் யாராவது பணியில் உள்ளனரா ? அவர்களை பணியில் அமர்த்தியவர்கள் யார் ? அவர்களுக்கு இந்த அதிகாரம் எப்படி வந்தது ? இது போன்ற அனைத்து விபரங்களையும் digitalize செய்து, அதனை கட்சி சாராத ஒரு ஆடிட்டர் குழு, தீர ஆடிட் செய்து, குறை நிறைகளையும், digitalize செய்ய வேண்டும். வருடா வருடம் ஒவ்வொரு கோயில் கணக்குகளையும் ஆடிட் செய்தார்களா ? செய்யவில்லையென்றால் ஏன் செய்யவில்லை ? அதன் மர்மம் என்ன ? அடுத்த ஆடிட் எப்போது செய்யப்படும் ? என்பனவற்றையும் digitalize செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X