அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : கலங்காதீர் கமல்!

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற வள்ளுவனின் வாக்குப்படி, தேர்தலில் தோல்வியை தழுவினாலும், என் உயிர் உள்ளவரை, அரசியலில் இருந்து விலக மாட்டேன்' என்று சூளுரைத்திருக்கிறார் நடிகர் கமல். களத்தில் இறங்கி

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்ற வள்ளுவனின் வாக்குப்படி, தேர்தலில் தோல்வியை தழுவினாலும், என் உயிர் உள்ளவரை, அரசியலில் இருந்து விலக மாட்டேன்' என்று சூளுரைத்திருக்கிறார் நடிகர் கமல். களத்தில் இறங்கி விட்டால், நின்று ஆட வேண்டியது தான். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். அதை கண்டு துவண்டு ஓடக் கூடாது. தி.மு.க.,வும், 10 ஆண்டுகள் கழித்து இப்போது தான் ஆட்சியை பிடித்துள்ளது. அதனால், தோல்வி என்பது நிலையல்ல. தோல்வி கண்டு துவண்டுவிடக் கூடாது கமல். தொடர்ந்து களைப்படையாமல் முயற்சிக்க வேண்டும்.



latest tamil news



முதலில் கமல் தன்னுடன் களப்பணியில் இறங்குவோர், நம்பகமானவரா அல்லது முதுகில் குத்துபவரா என்று ஆராய வேண்டும். அரசியல் களத்தில், தன் ரசிகர்களை நம்பி செயல்படாமல், 'பசை' உள்ளோரை நம்பி இறங்கி விட்டாரோ என, நினைக்க தோன்றுகிறது. தேர்தலில் ஜெயித்தால் ஏதாவது பதவி கிடைக்கும், ஆதாயம் கிடைக்கும் என எதிர்பார்த்தோர் தான், தோல்வியை தழுவியதும், கட்சியில் இருந்து வெளியேறி இருப்பர்.


latest tamil news



அவர்கள் புல்லுருவிகள் போன்றோர். கட்சியில் அவர்கள் இருப்பது, நல்லது அல்ல. உண்மையான தோழர்கள் யார் என்பதை அறிந்து, கமல் செயல்பட வேண்டும். 'என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்' என, கூறி இருப்பது, அவரின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gilbert - vienna,ஆஸ்திரியா
05-ஜூன்-202123:46:58 IST Report Abuse
gilbert இன்னுமா இந்த பாவாடைசாமிக்கு முட்டு குடுக்கிறீங்க,இப்ப இவன் பிச்சக்காசு க்யூவிலே ப்யூஸூக்கும் பின்னாடி,இதுபோல தேசவிரோதிங்களுக்கு முட்டுக்கொடுத்து பேர கெடுத்துக்காதீங்க,சொல்லிபுட்டேன்,அம்புட்டுதேன்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
05-ஜூன்-202120:11:51 IST Report Abuse
bal இது முதலை கண்ணீர்...செஞ்ச வேளைக்கு அச்சாரம் திமுகவிடம் வாங்கியாச்சு..இன்னுமா இந்த மாதிரி ஆளுங்களை நம்புறீங்க...
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
05-ஜூன்-202120:01:37 IST Report Abuse
Nagarajan D கமலஹாசன் ஒரு எடுபிடி அதுவும் தி மு க கூட்டத்தின் எடுபிடி என்பது எல்லோருக்கும் புரியும்படி செய்த அவன் செயல், பூச்செண்டுடன் சென்று ஸ்டாலின் அவர்களை வாழ்த்தியதே சொல்லிவிட்டது... ஸ்டாலினின் b டீமாக இருந்து admk தோற்க காரணமாக இருந்த ஒரு நாலாந்தர கூத்தாடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X