பொது செய்தி

தமிழ்நாடு

தெலுங்கானாவிலிருந்து 2600 டன் ரேஷன் அரிசி சின்னசேலம் வந்தது

Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சின்னசேலம்-தெலுங்கானாவிலிருந்து 2,600 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் சின்னசேலம் கொண்டு வரப்பட்டது.நாடு முழுதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏராளமான மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.இதனால், மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கூடுதலாக இலவச அரிசி வழங்கி வருகின்றனர். அதற்காக நேற்று, தெலுங்கானா மாநிலம், யதாத்ரி புவனகிரி மாவட்டத்திலிருந்து
 தெலுங்கானாவிலிருந்து 2600 டன் ரேஷன் அரிசி சின்னசேலம் வந்தது

சின்னசேலம்-தெலுங்கானாவிலிருந்து 2,600 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் சின்னசேலம் கொண்டு வரப்பட்டது.நாடு முழுதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏராளமான மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.இதனால், மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கூடுதலாக இலவச அரிசி வழங்கி வருகின்றனர். அதற்காக நேற்று, தெலுங்கானா மாநிலம், யதாத்ரி புவனகிரி மாவட்டத்திலிருந்து 53 ஆயிரம் மூட்டைகளில், 2600 டன் புழுங்கல் அரிசி நேற்று காலை ரயில் மூலம் சின்னசேலம் வந்தடைந்தது.42 ரயில் பெட்டிகளில் வந்த அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.முன்னதாக, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு மேற்பார்வையில், இந்திய உணவுக் கழக மேலாளர் வெங்கடாசலம், உதவி ஆய்வாளர் திருநீலகண்டன், துணை கிடங்கு மேலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மூட்டைகளை ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
05-ஜூன்-202116:22:29 IST Report Abuse
Sivagiri தமிழ்நாட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X