அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொலைநோக்கு பார்வை அரசுக்கு வேண்டும்: கமல்

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை : 'பிளஸ் 2 மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது, மாணவர்களின் நலனுக்கு எதிராகவே முடியும் என கல்வியாளர்கள்எச்சரிக்கின்றனர். இவ்விஷயத்தில், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக
Kamal, Kamal Haasan, Class 12 exam

சென்னை : 'பிளஸ் 2 மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது, மாணவர்களின் நலனுக்கு எதிராகவே முடியும் என கல்வியாளர்கள்எச்சரிக்கின்றனர். இவ்விஷயத்தில், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.


latest tamil news



பிளஸ் 2 மதிப்பெண், மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அயல்நாட்டு கல்வி உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவசியம். அனைத்து முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்பான சூழலில் தேர்வை நடத்துவதே சரியானது. பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்து அவர்களை பாதுகாக்கலாம்.

கேரளாவை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்திலும், பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும். இவ்விஷயத்தில் சிறந்த முடிவை தமிழக அரசு எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூன்-202121:15:37 IST Report Abuse
Venkat Raghavan Srinivasan உங்கள் அறிவுரை அரசுக்குதேவையில்லை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
05-ஜூன்-202120:22:07 IST Report Abuse
Vena Suna பள்ளி படிப்பை பாதியிலே விட்ட மேதாவி சொல்கிறார் ..கேளுங்கள்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
05-ஜூன்-202120:12:46 IST Report Abuse
bal சும்மா இருங்கப்பா...அதான் பணம் வாங்கியாச்சில்லே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X