ஐகோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு 3,000 டாக்டர்கள் ராஜினாமா

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
போபால் : மத்திய பிரதேசத்தில், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்திய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3,000 டாக்டர்கள், தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தப்

போபால் : மத்திய பிரதேசத்தில், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்திய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3,000 டாக்டர்கள், தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.



latest tamil news



மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம்தங்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குதல், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கை களுடன் இவர்கள் நடத்தும் போராட்டம், ஐந்தாவது நாளை எட்டி உள்ளது.


latest tamil news



இதற்கிடையே நேற்று முன்தினம், இது தொடர்பான வழக்கை விசாரித்த ஜபல்பூர் உயர் நீதிமன்றம், போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, இன்று பணிக்கு திரும்பும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3,000 ஜூனியர் டாக்டர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.


latest tamil news



கோரிக்கைகள் : இதுகுறித்து, மத்திய பிரதேச ஜூனியர் டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா நேற்று கூறியதாவது: மாநிலத்தில் உள்ள ஆறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 3,000 ஜூனியர் டாக்டர்கள், தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்த, அவர்கள் முடிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
05-ஜூன்-202120:08:34 IST Report Abuse
bal இவனுக்கு எல்லாம் டாக்டரே இல்லை...சுயநலவாதிகள்...செலவு பண்ணின பணம் எடுக்க முடியலன்னு வருத்தம்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
05-ஜூன்-202121:28:52 IST Report Abuse
Sathish பொறுப்பில்லாமல் மக்கள் சுற்றித்திரிந்து கொரோனா வாங்கிவருவார்கள் அவர்களுக்கு இவர்கள் உயிரை பணயம் வைத்து வைத்தியம் பார்க்கவேண்டும் அப்படித்தானே. அவர்கள் இறந்துபோனால் குடும்பத்தை நீங்க காப்பாற்றுவீங்களா? நீங்க மட்டும் நல்லா இருக்கணும். நல்ல எண்ணம்....
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
05-ஜூன்-202118:22:44 IST Report Abuse
Loganathaiyyan முஸ்லீம் நேரு காங்கிரஸ் வாழ்க வாழ்க வாழ்க என்று சொல்லும் கூட்டம் தானே இது
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
05-ஜூன்-202117:29:29 IST Report Abuse
spr "தங்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குதல், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தல் - இதுதான் கோரிக்கை என்றால் நியாயமான ஒன்றே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்படுவார்களோ என்று எதிர்பார்க்கப்பட்ட பலருக்கும் லட்ச லட்சமாக மானியங்கள் தரும் ஒவ்வொரு அரசும் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களுக்கு அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் நீதிபதிகளுக்கே கொரோனா இழப்பீடு பல லட்சங்கள் தரப்படுகின்றது அவர்கள் என்ன உயிரைக் காக்கப் போராடுபவர்களா (கொடிய குற்றவாளிகளுக்கு கூட மரண தண்டனை தருவதில்லை அவர்கள் உயிரைக் காக்கிறார்கள் என்று சொல்ல வேண்டாம்) மருத்துவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X