ஐகோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு 3,000 டாக்டர்கள் ராஜினாமா| Dinamalar

ஐகோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு 3,000 டாக்டர்கள் ராஜினாமா

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (53)
Share
போபால் : மத்திய பிரதேசத்தில், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்திய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3,000 டாக்டர்கள், தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தப்

போபால் : மத்திய பிரதேசத்தில், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்திய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3,000 டாக்டர்கள், தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.



latest tamil news



மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம்தங்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குதல், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கை களுடன் இவர்கள் நடத்தும் போராட்டம், ஐந்தாவது நாளை எட்டி உள்ளது.


latest tamil news



இதற்கிடையே நேற்று முன்தினம், இது தொடர்பான வழக்கை விசாரித்த ஜபல்பூர் உயர் நீதிமன்றம், போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, இன்று பணிக்கு திரும்பும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3,000 ஜூனியர் டாக்டர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.


latest tamil news



கோரிக்கைகள் : இதுகுறித்து, மத்திய பிரதேச ஜூனியர் டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா நேற்று கூறியதாவது: மாநிலத்தில் உள்ள ஆறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 3,000 ஜூனியர் டாக்டர்கள், தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்த, அவர்கள் முடிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X