பொது செய்தி

இந்தியா

2030ல் உலகின் மிகப் பெரிய பசுமை ரயில்வேக்கு இலக்கு!

Updated : ஜூன் 05, 2021 | Added : ஜூன் 05, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய ரயில் போக்குவரத்தை, 2030க்குள், உலகின் மிகப் பெரிய, 'பசுமை ரயில்வே'யாக மாற்ற திட்டமிட்டு, முழு வீச்சில் பணிகள் நடப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.நவீன தொழில்நுட்பம்சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும், 2030க்குள், 'பூஜ்ய கரியமில வாயு வெளியேற்றம்' என்ற இலக்கை
Indian Railways, net zero carbon emitter, 2030

புதுடில்லி: இந்திய ரயில் போக்குவரத்தை, 2030க்குள், உலகின் மிகப் பெரிய, 'பசுமை ரயில்வே'யாக மாற்ற திட்டமிட்டு, முழு வீச்சில் பணிகள் நடப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


நவீன தொழில்நுட்பம்


சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும், 2030க்குள், 'பூஜ்ய கரியமில வாயு வெளியேற்றம்' என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடக்கின்றன.

இதன் வாயிலாக, உலகின் மிகப் பெரிய பசுமை ரயில்வே என்ற சிறப்பை, இந்திய ரயில்வே பெறும்.வரும், 2023க்குள் அகல ரயில் பாதைகள் அனைத்தையும், 100 சதவீதம் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் வெப்பமயமாக்கலை தடுக்க, அனைத்து ரயில்களின் இயக்கத்தில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படும்.


latest tamil newsகரியமில வாயு


பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து தடங்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, பசுமை சூழலை உருவாக்கும் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ரயில்வேயின், 39 தொழிற்சாலைகள், ஏழு தயாரிப்பு பிரிவுகள், எட்டு ரயில் பெட்டி பராமரிப்பு கூடங்கள், ஒரு சரக்கு கிடங்கு ஆகியவற்றுக்கு 'பசுமை' சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பசுமை சான்றிதழ்


மின் சிக்கனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள், தண்ணீர் சேமிப்பு, கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, குறைவான பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், 'பசுமை சான்றிதழ்' வழங்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
05-ஜூன்-202117:12:29 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj முதலில் ரயில்வே வழிப்பாதையில் ரயில்வேக்கு உரிய இடங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து அகற்றி பசுமைக்காக மறக்க கன்றுகள் நாட்டி பசுமையை பதித்திட வளர்த்திட பாதுகாத்திட நடவடிக்கை எடுங்கள் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட ஆங்காங்குள்ள ஆக்கிரமிப்புகளை உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் பார்வைக்கு கொண்டு செல்லுவதே இல்லை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை மேலிடம் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் செயல்பாடுகள் நடப்பதே இல்லை சாக்கடை கிணறுகள் வாய்க்கால் வழி வீதிகளில் வழிந்தோடும் சாக்கடை நீர் பொது இட ஆக்கிரமிப்பு சாலைகள் ஆக்கிரமிப்பு எதனையும் கண்டு கண்டுகொள்ளுவதே இல்லை நீதி நியாயம் எடுத்து இயம்பும் பத்திரிகைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனவோ
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
05-ஜூன்-202112:03:56 IST Report Abuse
கௌடில்யன் முதலில் சரியான டாய்லெட் வசதியை ஏற்படுத்துங்கள்
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
05-ஜூன்-202110:04:32 IST Report Abuse
Apposthalan samlin விக்கப்போகிற ரயில்வே துறைக்கு சிலவு செய்வது வரிப்பணத்தை வீணடிப்பதே
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
06-ஜூன்-202106:56:26 IST Report Abuse
கௌடில்யன்நீங்க தண்ணீர் குடிங்க விக்கல் நிக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X